வான்கடே மைதானத்தில் அனில் கும்ப்ளேவின் மாபெரும் சாதனையை உடைத்த அஸ்வின்.. புதிய சாதனை

Ashwin 3
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில் எங் 71, டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாசிங்டன் சுந்தர் 4, ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி மிகவும் போராடி 263 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பின்னர் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் நியூசிலாந்து 2வது நாள் முடிவில் 171-9 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:

அதிகபட்சமாக வில் எங் 51 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக அஸ்வின் 3*, ரவீந்திர ஜடேஜா 4* விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். தற்போதைய நிலையில் நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனவே எஞ்சிய ஒரு விக்கெட்டையும் வேகமாக எடுத்து இந்தியா சேசிங் செய்வதற்கு தயாராகியுள்ளது.

குறிப்பாக ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் தோற்ற இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 12 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றுள்ளது. எனவே இந்தப் போட்டியில் எப்படியாவது வென்று ஒயிட்வாஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட உள்ளது.

- Advertisement -

வான்கடேவில் அசத்தல்:

முன்னதாக இந்தப் போட்டியில் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து மும்பையில் உள்ள உலகப் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் அஸ்வின் மொத்தம் 41 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக மும்பை வான்கடே மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையை உடைத்துள்ள அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இன்னும் 20 ரன்னுக்குள் 1 விக்கெட் எடுத்து.. 24 வருட சாத்திய இலக்கை சாதிக்குமா இந்தியா? புள்ளிவிவரங்கள்

1975 முதல் டெஸ்ட் போட்டிகளை நடத்தி வரும் மும்பை மைதானத்தில் இதற்கு முன் அனில் கும்ப்ளே 7 போட்டிகளில் 38 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. ஆனால் அஸ்வின் 6 போட்டியிலேயே 41 விக்கெட்டுகள் எடுத்து அவருடைய சாதனையை உடைத்துள்ளார். அந்த வகையில் தொடர்ந்து இந்திய அணிக்கும் தமிழகத்திற்கும் அஸ்வின் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement