இன்னும் 20 ரன்னுக்குள் 1 விக்கெட் எடுத்து.. 24 வருட சாத்திய இலக்கை சாதிக்குமா இந்தியா? புள்ளிவிவரங்கள்

IND vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த நிலையில் மூன்றாவது போட்டியில் ஒயிட்வாஸ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் இந்தியா விளையாடி வருகிறது. அப்போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 235 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக வில் எங் 71, டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4, ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்தியா மிகவும் போராடி 263 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

இன்னும் 1 விக்கெட்:

அதன் பின் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 171-9 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக வில் எங் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு இதுவரை அதிகபட்சமாக அஸ்வின் 3*, ஜடேஜா 4* விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். தற்சமயத்தில் நியூசிலாந்து 143 ரன்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் வைத்துள்ளது.

எனவே மிகவும் வேகமாக அந்த ஒரு விக்கெட்டை எடுக்க இந்திய அணி நாளை போராட உள்ளது. சொல்லப்போனால் அந்த 1 விக்கெட்டை அடுத்த 20 ரன்களுக்குள் இந்தியா எடுப்பது அவசியமாகிறது. ஏனெனில் மும்பை பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மேலும் மேலும் சவாலாகிக் கொண்டே வருகிறது.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:

அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களை சேசிங் செய்வது கூட கடினம். மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 163 ரன்கள் இலக்கை மட்டுமே வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றியை பதிவு செய்துள்ளது. அதற்கு மேற்பட்ட இலக்குகளை சேசிங் செய்த அணிகள் தோல்வியை சந்தித்துள்ளன.

இதையும் படிங்க: சதத்தை நழுவ விட்டாலும் என்னோட கேரியரில் இது ஒரு சிறந்த இன்னிங்ஸ்.. காரணம் இது தான்.. கில் பேட்டி

எனவே நியூசிலாந்தின் எஞ்சிய ஒரு விக்கெட்டை அடுத்த 20 ரன்களுக்குள் இந்தியா எடுத்தால் 163 ரன்கள் இலக்காக கிடைக்கும். அதை 24 வருடங்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா சேசிங் செய்தது போல இந்தியாவும் தொட்டு வெற்றிகரமாக தொடுவதற்கான வாய்ப்புகளும் சாத்தியமாக கிடைக்கும். எனவே அதை இந்திய அணி தயவு செய்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement