தோனியின் டைம் ஓவர். அடுத்த வருஷம் சி.எஸ்.கே அணியின் கேப்டனா இவர்தான் இருப்பாருன்னு நினைக்குறேன் – சஞ்சய் பாங்கர்

Sanjay-Bangar

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிமூன்றாவது ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறிவிட்டது. தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற விட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை அவர் செய்யவில்லை. 14 போட்டிகளில் ஆடி 172 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கண்டிப்பாக இல்லை அடுத்த வருடம் விளையாடுவேன் என்று தெரிவித்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் அடுத்த வருடத்தில் மெகா ஏலம் நடந்தால் அணியை முற்றிலும் மாற்றி கட்டமைக்க வேண்டியிருக்கிறது. புதிய வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் அதற்கான திட்டத்தை வகுத்து வருகிறோம் என்று கூறியிருந்தார் மகேந்திர சிங் தோனி.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறுகையில்… எனக்கு தெரிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த வருடம் புதிய கேப்டன் வர வாய்ப்பிருக்கிறது. டூப்லஸ்ஸிஸ் தான் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என்று கருதுகிறேன் .

அவரிடம்தான் தோனி அந்த பொறுப்பை ஒப்படைப்பார் என்று நினைக்கிறேன். ஏலத்தின் போது ஒரு வீரரை வாங்கி கேப்டனாக மாற்றலாம் . ஆனால் கேப்டன் அளவிற்கு தகுதி இருக்கும் ஓர் வீரரை மற்ற அணிகள் எப்போதும் விட்டுக் கொடுக்காது. ஆனால் சென்னை அணியில் தோனிக்கு பிறகு டூப்லஸ்ஸிஸ் தான் திறமையானவர் என்று தெரிவித்திருக்கிறார் சஞ்சய் பங்கர்.

- Advertisement -

faf

மேலும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் தோனி கேப்டன் பொறுப்பை தொடர விரும்பவில்லை. ஆனால் அப்போது அணியின் கேப்டன் பொறுப்பினை ஏற்க யாரும் தயாராக இல்லை என்பதால் இன்னும் பல ஆண்டுகள் கேப்டனாக இருந்து உரிய நேரம் வந்ததும் கோலியிடம் கேப்டன்சியை தந்தார். அதேபோன்று இப்போது சி.எஸ்.கே அணியின் கேப்டன்சியை துறக்கும் நேரம் வந்துவிட்டது . அதனால் அவருக்கு அடுத்து டூபிளெஸ்ஸிஸ் சென்னை அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.