இந்திய அணியில் ஜடேஜாவின் இடத்தை பிடிக்க இவர்தான் போராடி வருகிறார் – சஞ்சய் பாங்கர் ஓபன்டாக்

Bangar
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி அனுபவ ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு மூன்று ஆண்டுகளாக அவரது பேட்டியில் நல்ல முதிர்ச்சி இருப்பதனால் தொடர்ச்சியாக இந்திய அணியில் முக்கிய வீரராக இடம்பிடித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஜடேஜா அணியில் இருந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை தவறவிட்டார்.

jadeja 1

- Advertisement -

அதோடு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் முழுவதையும் தவறவிட்ட ஜடேஜா தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரையும் தவறவிட்டார். இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து பூரண குணமடைந்த அவர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக திரும்ப இருக்கிறார்.

ஜடேஜாவின் வருகையால் இந்திய அணியில் ஷர்துல் தாகூர் தனது இடத்தை இழந்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் ஜடேஜாவின் இடத்திற்காக போராடும் ஒரு வீரர் குறித்து தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

thakur

இந்திய அணியில் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் ஒரே இடத்திற்கு போட்டி போடுகிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இருவருமே ஆல்-ரவுண்டராக தங்களது சிறப்பான பணியை இந்திய அணிக்காக செய்து வருகிறார்கள். ஆனாலும் ஜடேஜா இடதுகை பேட்ஸ்மேன் என்பதாலும் பேட்டிங்கில் நல்ல திறன் இருப்பதனாலும் அவருக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

- Advertisement -

அதன் காரணமாக எப்போது ஜடேஜா அணியில் இணைந்தாலும் முதல் ஆளாக ஷர்துல் தாகூர் தான் அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இருப்பினும் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் தாகூர் சிறப்பாகவே தற்போது செயல்பட்டு வருகிறார். அவர் நிச்சயம் ஜடேஜாவின் இடத்திற்கு சரியான போட்டியாக இருக்கிறார் என்றே நான் கூறுவேன். இந்த இரண்டு வீரர்களும் கடந்த ஓராண்டாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கி வருகிறார்கள்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு அன்பளிப்பாக ஒரு ஷூவையும் அதோடு ஒரு கடிதத்தையும் அளித்த யுவ்ராஜ் சிங் – எதுக்கு தெரியுமா?

நிச்சயம் ஜடேஜாவின் இடத்திற்கு சரியான போட்டி ஷர்துல் தாகூர் தான் என சஞ்சய் பாங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement