கடந்த ஆண்டு ஆர்.சி.பி பெயிலியர் ஆனதுக்கு காரணம் இவர் மட்டும் தான் – சஞ்சய் பாங்கர் ஓபன்டாக்

Bangar

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் தொடர்களில் ஒருமுறைகூட தொடரை கைப்பற்றியது இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கி போடும் வண்ணம் இந்த ஆண்டு மிக அற்புதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பம் முதலே விளையாடி வருகிறது. சென்ற ஆண்டுக்கு அப்படியே நேர்மறையாக இந்த ஆண்டு மிக அபாரமாக விளையாடி வரும் அந்த அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் வீரர்களும் கருத்து கணிப்பு கூறியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சஞ்சய் பங்கர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறித்து ஒரு சில விஷயங்களைவிஷயங்களை பேசியுள்ளார்.

கடந்த ஒரு சில சீசன்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமே அந்த அணியில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் தவிர்த்து வேறு யாரும் அற்புதமாக விளையாடவில்லை அதன் காரணமாகவே அந்த அணியால் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக பங்களிக்க முடியவில்லை. ஆனால் இந்த ஆண்டு அணையில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் மிக அற்புதமாக தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். அதன் காரணமாகவே இந்த ஆண்டு அந்த அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு டிவில்லியர்ஸ் விராட் கோலி தவிர்த்து மேக்ஸ்வெல், படிக்கல், பட்டிதார் என ஒவ்வொரு வீரரும் தங்களது நிலை உணர்ந்து மிக அற்புதமாக விளையாடி வருகின்றனர் அதேசமயம் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில், ஹர்ஷல் பட்டேல் மற்றும் முகமது சிராஜ் மிக அற்புதமாக விளையாடி வருகின்றனர். இப்படி ஒவ்வொரு வீரர்களும் மிக அற்புதமாக விளையாடிய போது அந்த அணியின் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.

RCB

மேலும் பேசிய சஞ்சய் பங்கார் சென்ற ஆண்டு அந்த அணியில் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் அற்புதமாக விளையாடவில்லை. அதன் காரணமாகவே சென்ற ஆண்டு அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு ஒவ்வொரு வீரர்களும் மிக அற்புதமாக விளையாடி வருவது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது என்று கூறியுள்ளார். கண்டிப்பாக இந்த ஆண்டு பெங்களூரு அணி ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

finch

மேலும் இறுதியாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் முழுவதும் இப்படி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தால் நிச்சயம் இந்த ஆண்டு கோப்பையை அவர்கள் முதல் முறையாக கைப்பற்றுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement