நானா இருந்தா இனி ரஹானேவுக்கு வாய்ப்பே இல்ல. போயி ரஞ்சில ஆடிட்டு வரட்டும் – முன்னாள் கோச் ஆவேசம்

Rahane
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இதுவரை நடைபெற்றிருந்த 3 நாட்களின் முடிவில் தென் ஆப்பிரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. 4 ஆவது நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி கடைசி டெஸ்டை வென்று தொடரை 2-1 எண்ணற்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா 2 இன்னிங்ஸ்களிலும் சுமாராக மட்டுமே பேட்டிங் செய்து முறையே 223 மற்றும் 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.

RSA

ரகானே மீண்டும் சொதப்பல்:
முதல் இன்னிங்ஸ்சில் 223 ரன்களில் சுருண்ட இந்திய அணியானது இரண்டாவது இன்னிங்சிலும் பேட்டிங்கில் தத்தளித்தது. இந்த முக்கியமான போட்டியில் முதல் 2 போட்டிகளில் கை கொடுத்த தொடக்க வீரர்கள் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவை ஏமாற்றியது.

- Advertisement -

இதனால் ஏற்பட்ட சரிவில் இருந்து இந்தியாவை மீட்க கேப்டன் விராட் கோலி போராடிய போதிலும் அது பலனளிக்கவில்லை. ஏனெனில் அடுத்து வந்த மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பில்லாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள். குறிப்பாக ஏற்கனவே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் அஜிங்கிய ரஹானே இந்த போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 9 மற்றும் 1 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

Rahane-1

இனி வாய்ப்பில்லை:
கடந்த 2020 டிசம்பருக்கு பின் சதம் அடிக்க முடியாமல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக படுமோசமான பார்மில் இருந்து வரும் ரகானே மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியது பலரையும் கடுப்பேற்றியுள்ளது. ரசிகர்களைப் போலவே ரஹானேவால் கடுப்படைந்துள்ள இந்தியாவின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் இனி அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க கூடாது என கூறியுள்ளார். இது பற்றி இன்று அவர் அளித்துள்ள பேட்டியில்,

- Advertisement -

“சிறப்பான பந்துகள் ஏற்கனவே பார்மின்றி தவிக்கும் ரஹானேவை மேலும் பதம் பார்க்கிறது. என்னை கேட்டால் அவர் இனி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணியில் கம்பேக் கொடுக்க வேண்டும். நானாக இருந்தால் அவருக்கு இனி ஒரு வாய்ப்பு கூட வழங்க மாட்டேன் ஆனால் என்னை பொருத்தவரை புஜாரா பார்ம்க்கு திரும்புவார் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. கடந்த 3 – 4 வருடங்களாக ரகானே நல்ல பார்முக்கு திரும்புவார் என நம்ப அவர் எதுவும் செய்யவில்லை, அந்த மெல்போர்ன் டெஸ்டில் அடித்த சதம் தவிர வேறு எதுவுமே இல்லை”

rahane

என கூறிய சஞ்சய் பங்கர் கடந்த 3 – 4 வருடங்களாக அஜிங்கிய ரஹானே நல்ல பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஓய்ந்துவிட்டதாகவும் இனி அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். அவர் கூறுவது போல கடந்த 3 – 4 வருடங்களாகவே நல்ல பார்மில் இல்லாமல் திணறி வரும் ரகானே கடைசியாக கடந்த 2020 டிசம்பரில் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் ஆனால் அதன் பின்னும் கூட அவரால் முழு பார்ம்க்கு திரும்ப முடியவில்லை.

- Advertisement -

கதை முடிந்தது:
இனிமேல் இந்திய அணிக்காக அவர் விளையாட ஆசைப்பட்டால் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடி அதில் நல்ல பார்ம்மை பெற்றால் மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சஞ்சய் பங்கர் கூறினார். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வருடம் ரஞ்சி கோப்பை காலவரையின்றி தள்ளிவைப்பு பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Rahane 1

ரகானே பற்றி மேலும் அவர் பேசுகையில்,
“பேட்டிங்கின் போது அவரின் கால்களை நகர்த்தும் விதம் சரியில்லை, மயங் அகர்வாலின் பேட்டிங்க்கும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஒருவேளை நான் ராகுல் டிராவிட்டாக இருந்தால் குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அவரின் (ரகானே) கதை முடிந்தது என கருதுவேன். ஏனெனில் பல நாட்களாக திறமை வாய்ந்த இளம் வீரர்கள் அவரின் இடத்தில் விளையாட காத்திருக்கிறார்கள்”என சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் நீங்க இப்படி செய்யலாமா! – விராட் கோலியை விளாசிய கம்பீர்

கடந்த 2021 ஜனவரி முதல் இதுவரை 27 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரகானே அதில் வெறும் 547 ரன்களை 20.25 என்ற படுமோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement