பலருக்கு ரோல் மாடலாக இருக்கும் நீங்க இப்படி செய்யலாமா! – விராட் கோலியை விளாசிய கம்பீர்

gambhir
Advertisement

தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நகரில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 223 ரன்கள் மட்டுமே எடுத்து பின் தென்ஆப்பிரிக்காவை 210 சுருட்டியது.

Pant

மோசமான பேட்டிங்:
இதை தொடர்ந்து 13 ரன்கள் முன்னிலையுடன்2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்தியா மீண்டும் மோசமாக பேட்டிங் செய்து 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இந்தியாவை தாங்கிப் பிடித்த ரிஷப் பண்ட் சதமடித்து 100* ரன்கள் எடுத்தார். இதை அடுத்து 212 என்ற இலக்குடன் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா 3வது நாளின் முடிவில் 8 விக்கெட்கள் கையிருப்புடன் வெற்றிக்கு 111 ரன்கள் தேவை என்ற நல்ல நிலையில் உள்ளது.

- Advertisement -

வெடித்த சர்ச்சை :
முன்னதாக இப்போட்டியின் நேற்றைய 3வது நாளில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரை ரவிச்சந்திரன் அஸ்வின் எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார். ஆனால் அவர் அதை ரெவியூ செய்ததில் பந்து ஸ்டம்ப்க்கு மேலே சென்றதால் அவுட் இல்லை என தெரியவந்தது. இதை பார்த்த இந்திய வீரர்கள் பலரும் கடும் ஆக்ரோசமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கடும் கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி ஸ்டம்ப் அருகே சென்று அதில் உள்ள மைக்கில் :

stump

“உங்கள் அணி பந்தை தேய்க்கும் போது அதை கவனியுங்கள், அதைவிட்டுவிட்டு எல்லா நேரமும் எதிரணியை சாய்க்க நோட்டமிடதீர்கள்” என கூறினார். அவரின் கோபம் நியாயம் என்றே கூறலாம் ஏனெனில் அதை அவுட் கொடுத்த அம்பயர் “எராஸ்மஸ்” கூட “இது இம்பாசிபிள்” என தலையை அசைத்தார்.

- Advertisement -

இப்படி செய்யலாமா:
இந்நிலையில் அந்த தருணத்தில் தவறு இருந்தாலும் இல்லை என்றாலும் அதற்காக விராட் கோலி களத்தில் நடந்துகொண்ட விதம் மிகவும் தவறானது என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த ஒரு பேட்டியில், “இது மிகவும் மோசமானது. விராட் கோலி ஸ்டம்ப் அருகே சென்று அவ்வாறு நடந்து கொண்ட விதம் அவரின் முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது.

Drs

சர்வதேச அளவில் விளையாடும் ஒரு இந்திய கேப்டனமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை ஏனெனில் டெக்னாலஜி உங்கள் கையில் இல்லை. இது போல் நடந்து கொண்டால் நீங்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க முடியாது. மேலும் இந்த விஷயத்தில் ராகுல் டிராவிட் அவரிடம் பேசுவார் என நம்புகிறேன் ஏனென்றால் ராகுல் டிராவிட் ஒரு கேப்டனாக எப்போதும் இது போல் நடந்து கொள்ளமாட்டார்”

- Advertisement -

என கூறிய கௌதம் கம்பீர் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் விராட் கோலி நேற்றைய போட்டியில் நடந்து கொண்ட விதம் மிக மிக தவறு என குற்றம் சாட்டினார். அத்துடன் இந்த விஷயத்தில் விராட் கோலியை ராகுல் டிராவிட் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

RSA

குழந்தைகள் பாக்குறாங்க:
இதே சர்ச்சை பற்றி இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் நேற்றைய போட்டி முடிந்த பின் கூறுகையில், “நடுவரின் முடிவுக்கு எதிராக குரல் கொடுக்க உங்களுக்கு முழு உரிமையும் உள்ளது ஆனால் அதற்காக இந்த வகையில்தான் நடந்து கொள்ள வேண்டுமா? இந்த போட்டியை பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் அதை பார்க்கும் குழந்தைகள் அம்பயர் மற்றும் டிஆர்எஸ் ஆகியவை பற்றி தவறான அபிப்ராயத்தை தங்கள் மனதில் ஏற்படுத்திக் கொள்வார்கள்”

இதையும் படிங்க : ஐசிசி டி20 உலககோப்பை 2022 : முழு அட்டவணை வெளியீடு பற்றி ஐசிசி முக்கிய அறிவிப்பு ! முழு விவரம் இதோ

என நேற்றைய போட்டியில் விராட் கோலி நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது எனவும் இது போன்ற ஆக்ரோசமான செயல்பாடுகள் இளம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அம்பயரிங் பற்றி தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும் என தெரிவித்தார்.

Advertisement