விராட் கோலி அந்த தப்பை செய்திருக்கக்கூடாது.. கொஞ்சம் அவசரப்பட்டு அந்த முடிவை எடுத்துட்டாரு – சஞ்சய் பாங்கர் கருத்து

Bangar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். அப்படி பொறுப்பேற்ற விராட் கோலி தனது கேப்டன்சியை மிகச் சிறப்பாக செய்து பல்வேறு வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

டெஸ்ட் கேப்டன் விராட் கோலி :

அதிலும் குறிப்பாக அவர் டெஸ்ட் கேப்டன்சி பதவியை ஏற்றதில் இருந்து வெளிநாடுகளில் அதிக அளவு வெற்றிபெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். மேலும் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக யோ-யோ டெஸ்டையும் அணிக்குள் கொண்டு வந்த அவர் வீரர்களை மனதளவிலும் உடலளவிலும் வலிமையான வீரர்களாக மாற்றி அணியை பலமாக கட்டமைத்தார்.

- Advertisement -

அவரது தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி மேல் வெற்றிகளை பெற்றது. குறிப்பாக விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தோல்வி என்ற முடிவுகளை மட்டுமே யோசித்து விளையாடிய கோலி டிரா என்ற பேச்சுக்கு இடம் இல்லாத அளவிற்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார்.

அப்படி மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த அவரது கேப்டன்சி தென்னாப்பிரிக்க தொடரின் போது முடிவுக்கு வந்தது. இந்திய அணியின் நிர்வாகம் கொடுத்து அழுத்தத்தினால் கேப்டன்சி பதவியை விராட் கோலி ராஜினாமா செய்து விட்டு சாதாரண வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்துவிட்டார். இப்படி திடீரென விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகி இருக்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை தொடர்ச்சியாக கேப்டனாக நீடித்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது தலைமையில் இந்திய அணி ஏகப்பட்ட வெற்றிகளை குவித்து நல்ல நிலையில் இருந்தது. அதோடு வெளிநாடுகளிலும் அசுத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது. விராட் கோலி எப்போதுமே நமது அணி வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டக்கூடியவர்.

இதையும் படிங்க : போதும் சாமி ஆள விடுங்கன்னு ஓடி வந்துறேன்.. ரசிகர்களால் ஏற்பட்ட மன உழைச்சல் பற்றி.. ராகுல் வேதனை பேட்டி

அதனால் தான் வெளிநாட்டிலும் நமது அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. கோலி அப்போது இருந்த சூழ்நிலையில் முடிவு எடுத்துவிட்டார். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் அந்த தவறான முடிவை எடுத்து இருக்க கூடாது என்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர்ச்சியாக நீடித்து இருந்திருக்க வேண்டும் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement