போதும் சாமி ஆள விடுங்கன்னு ஓடி வந்துறேன்.. ரசிகர்களால் ஏற்பட்ட மன உழைச்சல் பற்றி.. ராகுல் வேதனை பேட்டி

Kl rahul 4
- Advertisement -

கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் கடந்த 2014 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பக் காலங்களில் தடுமாறிக் கொண்டிருந்த அவர் 2018, 2019 ஐபிஎல் தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அட்டகாசமாக விளையாடினார். அதனால் 2019க்குப்பின் ஷிகர் தவானை பின்னுக்கு தள்ளிய அவர் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்று துணைக் கேப்டனாகவும் முன்னேறினார்.

இருப்பினும் நாளடைவில் பெரிய ரன்கள் குவித்து தம்முடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள நினைத்த கேஎல் ராகுல் மெதுவாக விளையாடினார். அதைப் பற்றி கேட்டதற்கு “ஸ்ட்ரைக் ரேட் என்பது ஓவர்ரேட்டட்” என்று கூறிய ராகுல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினர். அதனால் ஒரு கட்டத்திற்கு பின் அவர் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

ரசிகர்களின் கிண்டல்:

அதே போல பிரபல தொகுப்பாளரான ஹர்ஷா போக்லே ஆரஞ்சு தொப்பிக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று மறைமுகமாக ராகுலை விமர்சித்தார். இருப்பினும் மாறாத அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் தடவலாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் இந்திய ரசிகர்கள் அவரை தடவல் நாயகன் என்று வெளிப்படையாகவே கிண்டலடிக்க தொடங்கினர்.

அதன் பின் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் குணமடைந்த போது முன்பை விட மோசமாக விளையாடினார். அதன் உச்சமாக கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிராக மிகவும் மெதுவாக விளையாடிய அவர் லக்னோவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா பொதுவெளியில் திட்டியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

மன உழைச்சல்:

அப்படி சமீப காலங்களில் சுமாராக செயல்படுவதால் தற்போது 3 வகையான இந்திய அணியிலும் கே.எல். ராகுலுக்கு நிலையான இடம் பறிபோயுள்ளது. இந்நிலையில் “போதும் சாமி ஆளை விடுங்க” என்று இன்ஸ்டாகிராமிலிருந்து ஓடிவரும் அளவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தம்மை கிண்டலடித்ததாக கேஎல் ராகுல் வேதனை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: நீங்க தான் டான் ப்ராட்மேன் ஆச்சே.. எப்படி பேட்டிங் செய்யனும்ன்னு மறந்துட்டீங்களா? பசித் அலி விமர்சனம்

“ஆரம்ப காலங்களில் நான் கிண்டல்களுக்கு கவலைப்படாமல் அதை நன்றாக கையாள்வேன். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நான் அதிகமான கிண்டல்களால் அம்பலமானேன். நான் உட்கார்ந்தால் எழுந்து நின்றால் கிண்டலடிக்கப்பட்டேன். தற்போது கிண்டல்களால் நான் முடிந்து போயுள்ளேன். அதனால் கடந்த ஒன்றரை வருடங்களில் நான் இன்ஸ்டாகிராமுக்கு அதிகம் செல்வதில்லை. அப்படியே சென்றாலும் எனக்கு தேவையான விஷயங்களை போட்டுவிட்டு உடனடியாக வெளியேறி விடுவேன்” என்று கூறினார்.

Advertisement