பாகிஸ்தான் அந்த 2 பேரை நம்பி மட்டும் தான் இருக்கு. ஆனா இந்தியா அப்படி கிடையாது – சஞ்சய் பாங்கர் கருத்து

Bangar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது துவங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மோதும் முதல் போட்டியாக வரும் அக்டோபர் 23-ஆம் தேதி இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியே பாகிஸ்தான் அணிக்கு எதிராக இருப்பதினால் அந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

INDvsPAK

- Advertisement -

ஏற்கனவே அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தி இருந்ததன் காரணமாக அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த முதல் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உடைய பலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரில் அடைந்த தோல்வியில் இருந்து நிறைய பாடங்களை கற்று இருக்கும். ஆனாலும் பாகிஸ்தான் அணியை மீண்டும் வீழ்த்தும் அளவிற்கு இந்திய அணியிடம் பலம் மிக அதிகமாகவே உள்ளது.

rizwan

நிச்சயம் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தும். ஏனெனில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் பலமே இரண்டு பேரை சுற்றி மட்டும்தான் இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தால் பாகிஸ்தான் ஆட்டம் காண்கிறது.

- Advertisement -

அவர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்து வருகிறது. ஆனால் இந்திய அணியில் அப்படி கிடையாது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக கடைசி பல தொடர்களாகவே இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக பலமாக மாறியுள்ளது. எந்த பேட்ஸ்மேனும் எந்த ஒரு இடத்திலும் இறங்க தயாராக இருக்கின்றனர்.

இதையும் படிங்க : ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் சதம் விளாசிய அனைத்து 9 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

ஆனால் பாகிஸ்தான அணியை பொறுத்தவரை ஓப்பனர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்து விட்டால் அந்த அணியால் 150 ரன்கள் கூட அடிக்க முடியாது என்ற நிலையே இருந்து வருகிறது. இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணி பாகிஸ்தானை எளிதில் இந்த உலகக் கோப்பை தொடரில் வீழ்த்தும் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement