இவங்களை வச்சி தோனி என்ன செய்ய போறாரு. பாக்க தான போறேன் – கிண்டலாக பேசிய பேட்டிங் கோச்

Sanjay-Bangar
- Advertisement -

மிகப் பெரும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான பதிமூன்றாவது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட இருக்கிறது. அபுதாபியில் நடைபெற இருக்கும் இந்த போட்டி நாளை இரவு சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது.

CskvsMi

- Advertisement -

இந்த போட்டியை சிஎஸ்கே வெற்றியுடன் துவங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் தோனி கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து களமிறங்கும் அதன் காரணமாக இந்தப் போட்டியில் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எதிரி உள்ளது. சிஎஸ்கே அணி துபாய் சென்றதில் இருந்து இப்போது வரை அணியில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகள் பயிற்சிகள் என பல்வேறு புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தத் தொடரில் சென்னை அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னாவின் விலகல், ஹர்பஜன் சிங்கின் விலகல் என அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் முதல் போட்டிக்காக யார் யாரை தோனி இறக்குவார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில் : தோனி ஒரு அனுபவம் வாய்ந்த கேப்டன் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை அவரிடம் நிறைய அனுபவம் உள்ளது.

Watson-2

அதுமட்டுமின்றி சென்னை அணியில் ஏகப்பட்ட கிரிக்கெட் விளையாடிய அனுபவமிக்க வீரர்களும் உள்ளனர். ஆனால் களத்தில் அந்த அனுபவங்களை தோனி எவ்வாறு கையாளப் போகிறார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று பாங்கர் கூறியுள்ளார். மேலும் வயதான வீரர்களிடம் பேட்டிங், பவுலிங்கில் எந்த சவாலையும் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதையும் பார்க்க காத்திருக்கிறேன்.

- Advertisement -

டி20 போட்டிகளில் மிக சவாலானது யாதெனில் பீல்டிங் மற்றும் வேகமான செயல்பாடுகள் தான். டி20 போட்டியின் முக்கியம் அப்படியிருக்கையில் சென்னை அணியில் இத்தனை சீனியர் வீரர்களை வைத்து தோனி என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு முக்கிய விஷயம் என்று கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து மூத்த வீரர்களை குறிவைத்து சஞ்சய் பாங்கர் தனது பேட்டியை அளித்துள்ளார். ஆனால் சிஎஸ்கே அணியில் மூத்த வீரர்கள் அதிகம் இருந்தாலும் சாய் கிஷோர் மற்றும் சாம் கரண் போன்ற இளம் வீரர்களும் இருக்கின்றனர். அவர்களும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவார்கள்.

Tahir

அது மட்டுமின்றி உலகின் சிறந்த பீல்டரான ஜடேஜாவும் மூத்த வீரர் தான் இருப்பினும் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இப்படி வயதான வீரர்களை மட்டுமே குறிவைத்து பேசியுள்ள பாங்கருக்கு சென்னை அணி சென்ற ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்றது நினைவில் இல்லையா என்று ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement