இந்திய அணியின் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். மேலும் அவர்கள் இருவருமே 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று விருப்பத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டாம் :
ஆனால் இந்திய அணியின் நிர்வாகம் அவர்களது வயதை கணக்கில் காட்டி அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய தயக்கம் காட்டுகிறது. மேலும் அவர்கள் இருவரையும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் படியும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
அதன் காரணமாக தற்போது ரோகித் சர்மா சையது முஷ்டாக் அலி தொடரிலும், விராட் கோலி விஜய் ஹசாரே தொடரிலும் விளையாட ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருமே உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட அவசியம் இல்லை என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இன்றளவும் மிகச்சிறந்த உடற்திறனோடு ரன் குவிக்கும் வேட்கையில் இருக்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் அவர்கள் ஏற்கனவே இரண்டு ஃபார்மட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.
எனவே இனியும் அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடித்தான் தங்களை நிரூபிக்க வேண்டும் என்று அவசியம் எதுவும் தேவையில்லை. தேவைப்படும்போது ஒரு சில பயிற்சி ஸ்செஷன்களில் அவர்கள் விளையாடினாலே மீண்டும் பார்மிற்கு வருவார்கள்.
இதையும் படிங்க : எங்க திருமணம் நின்னு போச்சு.. இதோட எல்லாம் முடிஞ்ச்சு.. மந்தனா வெளியிட்ட பதிவு.. நடந்தது என்ன?
அதனால் அவர்கள் இருவரையும் சுதந்திரமாக இந்திய அணியில் நீடிக்க வைக்க வேண்டும். அதோடு அவர்கள் இருக்கும் போது ஓய்வறையின் சூழலும் நன்றாக இருக்கும். அவர்கள் இருவரும் அணியில் இருக்கும் போது இளம் வீரர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



