இந்தாண்டு சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி கிடையாதாம். இவரே புதிய கேப்டன் – சஞ்சய் பாங்கர் கருத்து

Sanjay-Bangar
- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி பல நட்சத்திர வீரர்களை தங்கள் வசம் வைத்து ரசிகர்களின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

இதனையடுத்து சிஎஸ்கே அணியின் மீது அதிகப்படியான விமர்சனங்களும், ரசிகர்கள் சற்று மன வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். இருந்தாலும் சி.எஸ்.கே அணிக்கான ஆதரவு இன்றுவரை சற்றும் குறையவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தோனியை அணியிலிருந்து கேப்டனாக தொடர வைப்பார்களா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சிஎஸ்கே நிர்வாகம் தோனியை அணியில் வைத்திருப்பது உறுதி என்று கூறியிருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் டோனி இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்வது சந்தேகம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

faf

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனியை அருகில் இருந்து பார்த்து புரிந்து கொண்டவன் நான். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் பொறுப்பை அடுத்த வீரர்களிடம் ஒப்படைக்க தோனி விரும்பினார். ஆனால் அந்த சமயத்தில் தலைமை பண்பு மிக்க ஒரு வீரரை தெரிவு செய்ய நேரம் எடுத்துக் கொண்டது. அதனால் அவர் காத்திருந்து நேரம் வந்ததும் கோலியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

Faf

அதே போல இந்த முறையும் சிஎஸ்கே அணியை வழிநடத்திச் செல்லும் வாய்ப்பை டூப்லெஸிஸ்ஸிடம் டோனி வழங்குவார் என நான் நினைக்கிறேன். எனக்கு தெரிந்து தோனிக்கு அடுத்து சென்னை அணியை வழிநடத்தும் திறன் அவரிடமே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். எது எப்படி இருப்பினும் தோனி இந்த சீசனில் விளையாடுவது உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement