- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி அதுக்காக காத்திருப்பாரு.. ஆனா கோலி இறங்கி அடிப்பாரு.. கேப்டன்ஷிப் ஸ்டைல் பற்றி சஞ்சய் பங்கர்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்த கேப்டனாக போற்றப்படுகின்றனர். அதில் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 5 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள அவர் மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார்.

மறுபுறம் விராட் கோலி ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைகளை வென்றதில்லை. ஆனால் 2014ஆம் ஆண்டு தோனி ஓய்வு பெற்ற போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடியது. அப்போது பொறுப்பேற்ற விராட் கோலி தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் மற்றும் அதிரடியான முடிவுகளால் இந்தியாவை 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார்.

- Advertisement -

தரமான தோனி, விராட் கோலி:

அவருடைய தலைமையில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அத்துடன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்தியா வரலாறு சில காணாத வெற்றிகளை பெற்றது. அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே முந்திய விராட் கோலி வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் எம்எஸ் தோனி எப்போதும் ரிஸ்க் குறைவாக எடுத்து எதிரணிகள் தவறு செய்யும் வரை காத்திருந்து வீழ்த்துவார் என்று முன்னாள் இந்திய அணி வீரர் மற்றும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். ஆனால் விராட் கோலி வெளிநாடுகளில் எதிரணிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ரிஸ்க்கான முடிவுகளுடன் களமிறங்குவார் என்று அவர் தெரிவித்துள்ளார். தோனி மற்றும் விராட் கோலியின் கேப்டன்ஷிப் ஸ்டைல் பற்றி சஞ்சய் பங்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கேப்டன்ஷிப் ஸ்டைல்:

“எம்எஸ் ஒரு கேப்டனாக தாம் எல்லா ரிஸ்க்களையும் களைந்திருப்பதை உறுதி செய்து களத்திற்குள் செல்வதற்கு முன் எல்லா கோணங்களிலும் யோசிப்பார். எதையாவது செய்ய வேண்டுமெனில் அதைப் பற்றி நாம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் எல்லா ரிஸ்க்குகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்ற அழைப்பை தோனி எடுப்பார். எதிரணி தவறு செய்யட்டும் நான் காத்திருப்பேன் என்று தோனி இருப்பார்”

இதையும் படிங்க: ஐபிஎல் கிடையாது.. ஓய்வுக்குப்பின் யுவி அழைப்பை ஏற்று புதிய தொடரில் விளையாடும் தவான்.. வெளியான அறிவிப்பு

“அது அவருக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்தது. அவர் ஸ்பின்னர்களை கையாண்டு சூழ்நிலைகளைப் படிப்பதில் மாஸ்டர். விராட் கோலி தலைமையில் வெளிநாடுகளில் இந்தியா தங்களது செயல்பாடுகளை முன்னேற்றியது. வெளிநாடுகளில் அசத்துவதற்கு விராட் கோலி நாம் 5 பவுலர்களுடன் விளையாட வேண்டும், பேட்ஸ்மேன்கள் எக்ஸ்ட்ரா பொறுப்புடன் விளையாட வேண்டும், எதிரணியை கண்டிப்பாக 2 முறை அவுட்டாக்க வேண்டும் போன்ற விஷயங்களை கண்டறிந்து பங்காற்றினார்” என்று கூறினார்.

- Advertisement -