1975 – 1980 சினிமாக்களில் அமிதாப் செஞ்சதை.. நிஜத்தில் விராட் கோலி இந்தியாவுக்காக செஞ்சாரு.. சஞ்சய் பங்கர்

Sanjay Bangar
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறந்த வீரராக போற்றப்படுகிறார். 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியாவின் கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து இதுவரை 27000+ ரன்கள் 82 சதங்கள் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிள்ளார்.

அதை விட 2014ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்தியா ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது தம்முடைய ஆக்ரோஷமான அணுகுமுறையால் அதிரடியாக செயல்பட்ட விராட் கோலி 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாறு படைத்தது.

- Advertisement -

சினிமாவில் அமிதாப்:

மேலும் எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக பயப்படாமல் திருப்பி அடித்து போராடி வெல்லும் குணத்தையும் விராட் கோலி இந்திய அணியில் ஆழமாக விதைத்தார் என்றும் சொல்லலாம். இந்நிலையில் 1975 – 1980களில் பாலிவுட் சினிமாவில் நடிகர் அமிதாபச்சன் செய்ததை விராட் கோலி உண்மையில் இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் செய்ததாக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.

இது பற்றி டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி இயற்கையாக உங்களுடைய முகத்துக்கு முன் துணிச்சலாக செயல்படக்கூடிய குணத்தைக் கொண்டவர். அதுவே அவருடைய இயற்கையான குணம். உங்களுடைய இயற்கையான குணம் உணர்வைக் கொடுக்கும். 1975 – 1980 காலகட்டங்களில் அமிதாப்பச்சன் படங்கள் ஏன் வெற்றிகரமாக ஓடின?”

- Advertisement -

நிஜத்தில் கிங் கோலி:

“ஏனெனில் ஒரு கோபமான இளைஞனைப் பற்றி எண்ணம் இருந்தது. இந்திய சமூகத்தில் எங்கோ ஒரு கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. அது சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் வெற்றிகரமாக மாறின. அதே போல சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் ஓய்வுக்குப் பின் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆக்ரோசம் தேவைப்பட்டது”

இதையும் படிங்க: கில் நெருங்க கூட முடியாது.. டேஞ்சரான சாம்சனை அவருக்காக வேஸ்ட் பண்ணிடாதீங்க.. கம்பீரை எச்சரித்த சாஸ்திரி

“அப்போது விராட் கோலி நம்முடைய கிரிக்கெட்டை தன்னுடைய ஸ்டைலில் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியா எப்படி அணுகுகிறது என்று அணுகு முறையின் பிம்பத்தை தலைகளாக மாற்றினார்” என்று கூறினார். மொத்தத்தில் 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுள்ள விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement