கில் நெருங்க கூட முடியாது.. டேஞ்சரான சாம்சனை அவருக்காக வேஸ்ட் பண்ணிடாதீங்க.. கம்பீரை எச்சரித்த சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 டி20 செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அத்தொடரில் விளையாடும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் நீண்ட காலம் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்ததும் ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் 3 சதங்கள் அடித்த சாம்சன் ஒரு வழியாக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தமக்கான இடத்தைப் பிடித்தார். ஆனால் தற்போது இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்து அசத்திய சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அபிஷேக் ஷர்மாவுடன் அவரை கெளதம் கம்பீர் ஓப்பனிங்கில் விளையாட வைப்பார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

டேஞ்சரான சாம்சன்:

ஏனெனில் 3, 4வது இடங்களில் திலக் வர்மா, கேப்டன் சூரியகுமார் ஆகியோர் விளையாடுவார்கள். 6, 7வது இடங்களில் ஹர்டிக் பாண்டியா, அக்சர் படேல்/ரிங்கு/துபே ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் ஏற்கனவே சாம்சன் தடுமாறியதால் 2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்ல உதவியத ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக விளையாட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் டாப் 3 இடங்களில் மிகவும் டேஞ்சரான பேட்ஸ்மேன் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே அவருடைய இடத்தை சுப்மன் கில்லால் கூட எளிதாக நெருங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் சஞ்சு சாம்சன் டாப் 3 இடத்தில் விளையாட வேண்டும் என்று கம்பீரை எச்சரிக்கும் சாஸ்திரி இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

எச்சரித்த சாஸ்திரி:

“சாம்சன் டாப் 3 இடங்களுக்குள் மிகவும் ஆபத்தானவர். அங்கே தான் உங்களுக்காக அவர் போட்டிகளை வென்று கொடுப்பார். எனவே அவரை நீங்கள் அங்கேயே விட வேண்டும். அவரது இடத்தை கில் நிரப்புவது எளிதாக இருக்காது. சாம்சன் டாப் ஆர்டரில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் வலுவான ரெக்கார்டை வைத்துள்ளார். சுப்மன் கில் அவரது இடத்தைப் பிடிக்கும் வழியைக் கண்டறிவது கடினமாக இருக்கும்”

இதையும் படிங்க: இதை செஞ்சு பஞ்சாப் என்னை அவமானப்படுத்துனாங்க.. உடைஞ்சு போய் ராகுலிடம் சொல்லிட்டு கிளம்புனேன்.. கெய்ல்

“சுப்மன் கில் வேறு ஒருவரின் இடத்தில் விளையாட வரலாம். ஆனால் சாம்சனை ஓப்பனராக விளையாட விட வேண்டும். இந்தியாவுக்காக அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடிய விதத்தை தொடர வேண்டும். ஏனெனில் டாப் ஆடரில் அவர் பெரிய ரன்கள், சதங்கள் அடித்து தொடர்ச்சியாக அசத்தியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement