என்ன நடந்துருந்தாலும் இந்திய அணியை விட்டுட்டு போய்ருக்கக் கூடாது.. கோலி மீது சஞ்சய் பங்கர் ஏமாற்றம்

Sanjay Bangar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். கடந்த 16 வருடங்களாக அசத்தி வரும் அவர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார்.

முன்னதாக கேப்டனாகவும் விராட் கோலி இந்தியாவுக்காக வெற்றிகரமாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். குறிப்பாக 2014ஆம் ஆண்டு தோனி விலகிய போது இந்தியா ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் ஏழாவது இடத்தில் திண்டாடியது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் 2016 – 2021 வரை தொடர்ந்து இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார்.

- Advertisement -

மகத்தான டெஸ்ட் கேப்டன்:

அத்துடன் அவருடைய தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை படைத்தது. மேலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் அவருடைய தலைமையில் இந்தியா வரலாறு காணாத வெற்றிகளை பதிவு செய்தது. இருப்பினும் உலகக் கோப்பை வென்று கொடுக்காததால் எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து விராட் கோலி டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து மட்டும் விலகினார்.

அதை பயன்படுத்திய பிசிசிஐ வெள்ளைப்பந்து அணிக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று சொல்லி விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பறித்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி 2022 தென்னாப்பிரிக்க தொடர் முடிந்ததும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தொடர்ந்திருக்க வேண்டும்:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் 65 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் அதைத் தொடர்ந்து செய்திருக்க வேண்டும். அதை விட விராட் கோலி தலைமையில் இந்தியா வெளிநாடுகளில் முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியது”

இதையும் படிங்க: அதை மறக்க முடியாது.. இளமையான உங்களுக்கு கிரிக்கெட்டில் வாய்ப்பிருக்கு.. தவானை வாழ்த்திய சச்சின், சாஸ்திரி

“இந்தியா தங்களது சொந்த மண்ணில் 75% வெற்றி பெறும் என்பது எதிரணிகளுக்கு தெரியும். மேலும் சிறந்த ஃபிட்னஸ் தகுதியை அடைந்த அவர் உடல் வரம்புகளுக்கு சவால் விட்டார். அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அத்துடன் கேப்டனாக இருந்த போது தான் அவர் பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்கள் எடுத்தார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement