தோனி செய்தது சரிதான்..! தோனி பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பயிற்சியாளர்..! – யார் தெரியுமா..?

thala
- Advertisement -

சில மாதங்களாக தோனி மீது பல்வேறு விமர்சங்கங்கள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் தோனி மீண்டும் தனது பழைய திறனுக்கு திரும்பிவிட்டார் என்று பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மெதுவாக விளையாடிய தோனி மீது மீண்டும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்து விட்டது.
ravi
கடந்த சனிக்கிழமை(ஜூலை 14) இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று கூறப்படும் தோனி மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் 59 பந்துகளை எதிர்கொண்ட தோனி 37 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். தோனியின் இந்த ஆமை வேக ஆட்டம் தனது 174 பந்தில் 36 ரன்கள் எடுத்த ஆட்டத்தைவிட படு கேவலமாக இருந்தாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தோனி ஆடிய விதம் சரிதான் என்று இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “. இந்திய அணியில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்து வந்தது. அதானல் தோனி சரியான பார்ட்னர்ஷிப் அமைய காத்துக் கொண்டிருந்தார். அவருடன் கை கோர்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா, ஹர்திக் பாண்டியாவும் களத்தில் இல்லை. அவரால் என்ன செய்யமுடியும் அவர் அடித்து ஆடி இருந்தால் அவரும் ஆட்டமிழந்திருப்பார். எனவே அவர் செய்தது சரிதான் ” என்று தோனியின் பக்கம் நின்றுள்ளார் சஞ்சய் பாங்கர்
sanjay-bangar
தோனி மீது வைக்கப்பட்ட விமர்சனம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவிக்கையில் ‘தோனி நினைத்தது போல ஆடமுடியாமல் போனால் மட்டுமே இது போன்ற கேள்விகள் வருகின்றது. அவரை குற்றம் சொல்ல சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் சிறப்பாக விளையாடினால் அவர் ஒரு சிறந்த பினிஷெர். இல்லையென்றால் அவர் மீது விமர்சனத்தை வைப்பார்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement