உண்மையாவே அக்கறை இருந்தா இதை செஞ்சு ஆக்சனில் காட்டுங்க.. ரோஹித்துக்கு சஞ்சய் பங்கர் அட்வைஸ்

Sanjay Bangar
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் பத்து வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை நழுவ விட்ட இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் கோட்டை விட்டது. அந்தத் தோல்விக்கு விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார்கள்.

குறிப்பாக ரோஹித் சர்மா ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தோல்விக்கு காரணமாக அமைந்தார். இது போக சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அவருடைய தலைமையில் இந்தியா வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் ரோஹித் சர்மா தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொண்ட முதல் இந்திய கேப்டனாக மோசமான சாதனை படைத்தார்.

- Advertisement -

ஆர்வம் இருக்கா:

அதனால் அவருடைய டெஸ்ட் கேரியர் முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உண்மையாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட அக்கறை இருந்தால் ரஞ்சிக்கோப்பையில் விளையாடி ஃபார்மை முன்னோக்கி காட்டுங்கள் என்று அவருக்கு முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நீங்கள் 37 வயதில் இருக்கும் போது ஒவ்வொரு தோல்வியும் வலியை கொடுக்கும். ஏனெனில் அப்போது நீங்கள் பெருமை மிகுந்த கிரிக்கெட்டராக இருப்பீர்கள். இளம் வீரர்கள் நன்றாக விளையாடும் போது கடந்த காலங்களில் நீங்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளை தற்போது வெளிப்படுத்த முடியாமல் போவது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்”

- Advertisement -

ஆக்சனில் காட்டுங்க:

“அதுவே ரோகித் சர்மா கடைசி போட்டியில் விலகும் முடிவை எடுத்திருக்க வைத்திருக்கலாம். தற்போதைய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் ஆர்வம் நம்மிடம் இருக்கிறதா? என்பதை ரோகித் பார்க்க வேண்டும். ஒருவேளை அப்படி இருந்தால் அது அவருடைய ஆக்ஷனில் வெளிப்பட வேண்டும். இங்கே உள்ளூர் கிரிக்கெட்டை பற்றி நிறைய பேசுகிறார்கள்”

இதையும் படிங்க: 2021, 2023 இந்தியா மாதிரி இல்ல.. ஆஸியை ஃபைனலில் எப்படி சாய்க்கனும்னு தெரியும்.. ரபாடா, கோச் பேட்டி

“ரோகித்துக்கு நிகரான திறமையும் அந்தஸ்தும் கொண்ட ரகானே, புஜாரா ஆகியோர் இப்போதும் உள்ளூரில் விளையாடி இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறோம் என்பதை காண்பிக்கிறார்கள். அதே போல ரோகித் சர்மாவும் நான் எங்கேயும் செல்லவில்லை இந்தியாவுக்காக இன்னும் விளையாட காத்திருக்கிறேன் என்பதை உள்ளூரில் விளையாடி காண்பிக்க வேண்டும். அதை செய்தால் யாரும் அவரை தடுக்க முடியாது. மீண்டும் வாய்ப்பு பெறுவதற்கு ஃபார்ம் மற்றும் ஆர்வம் முக்கியமானதாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement