- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி டக் ஆவதற்கு அனுஷ்கா காரணமா என்ன பேசுறீங்க ? பைத்தியம் மாதிரி பேசாதீங்க – சானியா மிர்சா பளார் பதில்

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் கவனக் குறைவுக்கு அவர்களுடன் வெளிநாட்டு தொடர்கள் மற்றும் உள்நாட்டு தொடர்கள் என அவர்களுடன் இருக்கும் மனைவிகளை சிலர் குறை கூறி வருகின்றனர். ஆனால் அது போன்று மனைவிகளை குறை கூறக்கூடாது என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் சானியா மிர்சா கூறியதாவது : கிரிக்கெட் வீரர்களின் கவனச்சிதறலுக்கு பெண்களை காரணமாக கூறுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம். பெண்கள் வீரர்களின் கவனச்சிதறலுக்கு நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும். பெரும்பாலான நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் அவர்களின் மனைவி மற்றும் பெண் தோழிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு காரணமாக வீரர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஆனால் என்னை பொறுத்தவரை அப்படி கவனச்சிதறல் எதுவும் பெண்களால் ஏற்படாது. மேலும் அவர்கள் அழுத்தத்தில் இருந்தால் மனைவி மற்றும் பெண் தோழிகள் அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகம் அளிக்கும் வகையில் மனதளவில் பலமாகவே செயல்படுவார்கள் என்றும் சானியா கூறினார்.

மேலும் கோலி குறித்து அவர் பேசுகையில் கிரிக்கெட் போட்டியில் கோலி டக் ஆகும்போது கூட அனுஷ்காதான் அதற்கு காரணம் என்று பலர் கூறினார்கள். அப்படி குறைகூறி என்ன செய்ய முடியும் ஒரு போட்டியில் அவர் சிறப்பாக ஆடவில்லை என்றால் அவர் மனைவியை குறை சொல்வது நியாமா ? பல போட்டிகளில் சிறப்பாக விளையாடும்போது யாரும் அனுஸ்காவை ஏன் பாராட்டுவதில்லை என்று சானியா மிர்சா பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by