சானியா மிர்சாவின் தங்கைக்கும் கிரிக்கெட் வீரர் குடும்பத்தில் தான் திருமணமாம் – யாருன்னு பாருங்க அசந்துடுவீங்க

Anam-2

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்தார். அவர்களுக்கு தற்போது சமீபத்தில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

anam 1

சானியா திருமணம் செய்துகொண்டபோது அவருடைய திருமணம் அப்போது பெரும் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சானியா மிர்சாவின் தங்கை ஆனம் மிர்சா தற்போது ஒரு கிரிக்கெட் வீரரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தற்போது சானியாமிர்சா உறுதி செய்துள்ளார். அதன்படி சானியா மிர்சாவின் தங்கையான ஆனம் மிர்சா ஃபேஷன் ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார். மேலும் அவர் தற்போது அசாருதீன் மகனான ஆசாத் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக சானியாமிர்சா உறுதி செய்துள்ளார். மேலும் தங்கள் குடும்பத்துடன் இணைய இருக்கும் ஆசாத்துக்கு வாழ்த்துக்களையும் சானியாமிர்சா தெரிவித்துள்ளார்.

anam mirza

ஆனம் மிர்சா மற்றும் ஆசாத் ஆகியோர் தற்போது பல இடங்களுக்கு டேட்டிங் செய்வதாகவும் விரைவில் அவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.