கணவர் மாலிக் ஓய்வு குறித்து பேட்டி ஒன்றினை அளித்து நெகிழ்ந்த சானியா மிர்சா

sania 3
- Advertisement -

இந்த உலகக் கோப்பைத் தொடர் உடன் சோயப் மாலிக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 8 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

pakisthan

- Advertisement -

இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய வங்கதேச அணியுடனான போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது 37 வயதான சுமார் 287 போட்டிகளில் விளையாடி 7534 ரன்களை குவித்துள்ளார். மேலும் 158 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

malik

இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து பேசிய அவருடைய மனைவி சானியா மிர்சா கூறியதாவது : ஒவ்வொரு கதைக்கும் ஒரு முடிவு உண்டு ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கம் தான். 20 வருடங்களாக உங்கள் நாட்டுக்காக நீங்கள் பெருமையுடன் ஆடி உள்ளீர்கள். நானும் மகன் இன்ஷானும் நீங்கள் யார் என்பது பற்றியும் நீங்கள் சாதித்திருப்பது பற்றியும் பெருமை அடைகிறோம் என்று பேட்டியளித்துள்ளார்.

Advertisement