- Advertisement -
ஐ.பி.எல்

SRH vs CSK : சி.எஸ்.கே மற்றும் சன் ரைசர்ஸ் போட்டியை காண வந்த சானியா மிர்சா – காரணம் இதுதான்

நேற்று நடந்த சன் ரைசர்ஸ் அணிக்கும் மற்றும் சென்னை அணிக்கும் இடையேயான போட்டி ஐதராபாத் நகரில் நடந்தது. இந்த போட்டியை காண மைதானத்திற்கு இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா வந்திருருந்தார். சமீபத்தில் சானியா மற்றும் மாலிக் ஜோடிக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. சானியா மிர்சாவின் சொந்த ஊரான ஹதராபாத் நகரில் நடந்த போட்டி என்பதால் சன் ரைசர்ஸ் அணியை ஆதரிக்கவே சானியா போட்டியை காண வந்துள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடக்கும் போட்டியை காண அவர் தவறாமல் மைதானத்திற்கு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 33 ஆவது போட்டி நேற்று ஐதராபாத் நகரில் 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் டுப்ளிஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அதன் பின் வந்த வீரர்கள் பொறுமையாக ஆட சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். வார்னர் 50 ரன்களும், பேர்ஸ்டோ 61 ரன்களையும் குவித்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தனர். பின்பு வந்த வீரர்கள் சுமாராக ஆட அந்த அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை குவித்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் ஆட்டநாயகனாக தேர்வானார்.

- Advertisement -
Published by