ஒரே இரவில் எதுவும் மாறாது. குழந்தைகள் கிட்ட சொல்லிக்கொடுத்து வளங்க – ஹர்ஷா போக்லேவுடன் உரையாடிய சங்ககாரா

Sanga

அமெரிக்காவில் இனவெறி சர்ச்சையால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளையாட் சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து உலகெங்கும் கருப்பின மக்களுக்கு எதிராக அனைத்து மக்களும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற இயக்கத்தின் மூலமாக இந்த இனவெறிக்கு எதிராக தங்களது கண்டனங்களை எழுப்பிவருகின்றனர்.

BLack

உலக மக்கள் பலரும் இந்த இயக்கத்தின் மூலம் தங்களது எதிர்பினையும், அவர்களுக்கு ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரிலும் பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்ற வாசகத்தை கொண்ட டீசர்டை இரு அணி வீரர்களும் அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆன் லைன் வீடியோ சாட் மூலம் உரையாடிய பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே மற்றும் குமார் சங்கக்கார ஆகியோருடன் உரையாடலிலும் இனவெறி குறித்த சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Sangakkara

அதில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்ககாரா இனவெறி குறித்து கூறியதாவது :
இனவெறி பாகுபாடு என்பது தோல் நிறத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. வேறு சில வழிகளிலும் அரங்கேற வாய்ப்பு உள்ளன. அதனை களைய வேண்டும் ஒவ்வொருவரும் அது சார்ந்து விழிப்புணர்வுகளை பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

- Advertisement -

Bhogle

மேலும் அதன் மூலம் மனதையும் தூய்மை செய்யலாம். இந்த மாற்றம் எல்லாம் ஒரே இரவில் நடந்து விடாது. குறிப்பாக இதனை குழந்தைகளிடத்தில் பரவலாக கொண்டு செல்வது அவசியம். மாற்றம் என்பது ஒரே இரவில் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.