2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இவர் மட்டும் ஆடியிருந்தா நாங்கதான் ஜெயிச்சிருப்போம் – சங்கக்காரா பேட்டி

- Advertisement -

2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி சங்ககாரா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டது. மும்பை வாங்கடேவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ரன்கள் குவித்தது. பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக கம்பீர் 97 ரன்களும், தோனி 92 அடித்து இந்திய அணி வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் இந்திய அணி இருபத்தி எட்டு ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த போட்டியில் இலங்கை வீரரான இவர் மட்டும் ஆடியிருந்தால் முடிவு மாறியிருக்கும் என்று இலங்கை அணி கேப்டன் குமார் சங்ககாரா தற்போது தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி இந்திய அணியின் வீரரான அஸ்வினுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிய சங்ககாரா இது குறித்து கூறுகையில் :

Sanga-1

இலங்கை அணி இறுதிப் போட்டிகளில் சில கேட்சிகளை தவறவிட்டது. மேலும் பீல்டிங்கில் ஏற்பட்ட சில தவறுகள் மற்றும் பேட்டிங்கில் குறைபாடு என பல காரணங்களைக் கூறலாம். ஆனால் எங்கள் அணியில் மேத்யூஸ் மற்றும் காயத்தால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது நிச்சயம் அது எனக்கு பெரிய திருப்பு முனையாகவும், பின்னடைவாகவும் அமைந்தது.

- Advertisement -

மேத்யூஸ் கடைசிநேரத்தில் ஆட முடியாததால் அணியின் காம்பினேஷனை மாற்ற நேரிட்டது. அவர் ஐந்தாவது பவுர் மட்டுமல்லாமல் ஏழாவது இடத்தில் இறங்கி அதிரடியாக ஆடக்கூடிய. அவர் இலங்கை அணியின் அருமையான ஆல்ரவுண்டர். அவர் காயத்தால் ஆட முடியாமல் போனது எங்கள் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. மேத்யூஸ் மட்டும் மணியிலிருந்து இருந்தால் டாஸ் வென்ற நாங்கள் கண்டிப்பாக முதலில் இந்தியாவை பேட் செய்ய விட்டு சேஸிங் செய்து இருப்போம் என்று சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

Mathews 1

இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மேத்யூஸ் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சம அளவில் கை கொடுக்க கூடிய மிக முக்கியமான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்ககாராவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement