- Advertisement -
உலக கிரிக்கெட்

எனது சிரிப்பிற்கு பின்னால் இருந்த சோகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ? 2011 உலககோப்பை நினைவுகளை பகிர்ந்த – சங்கக்காரா

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் சந்தித்தன இந்திய அணி 8 ஆண்டுகளுக்கு பின்னரும், இலங்கை அணி 24 ஆண்டுகளுக்குப் பின்னரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எப்படியாவது இரு அணிகளும் கோப்பையை கைப்பற்றி தங்கள் நாட்டிற்கு கொண்டு விட வேண்டும் என்று உணர்ச்சி பொங்க போராடிக் கொண்டிருந்தனர்.

முக்கியமான அந்த இறுதிக்கட்டத்தில் யுவ்ராஜ்க்கு முன்னர் களமிறங்கிய தோனி தனது பொறுப்பினை உணர்ந்து இறுதியில் லாங் ஆனில் சிக்ஸர் அடிக்க, களத்தில் இருந்த யுவராஜ் சிங் தோனியை கட்டிப்பிடிக்க என இந்திய வீரர்கள் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

ஆனால், விக்கெட் கீப்பராக இருக்க இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா பெரிதாக தனது சோகத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சிறு புன்னகையுடன் வீரர்களுடன் கைகுலுக்க சென்றார். இந்த புகைப்படம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் அந்த சோகமான சிரிப்பிற்கு பின்னர் உள்ள ஏமாற்றத்தை பற்றி தற்போது கூறியுள்ளார் குமார் சங்ககாரா.

இதுகுறித்து அவர் பேசுகையில்… இலங்கையில் நாங்கள் வசிப்பது, எங்களுக்கு பெரிய ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கற்றுக் கொடுத்துள்லது. நாங்கள் கடந்த 30 வருடங்களாக போரிலிருந்தோம்.இயற்கை சீற்றங்கள் எங்களுக்கு எப்போதும் இருக்கும். பலவிதமான பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

- Advertisement -

இயற்கையிலேயே நாங்கள் எதையும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள். அனைத்தையும் சமாளித்து வெளிவரும் தன்மை எங்களிடம் பிறப்பிலேயே இருக்கிறது. நாங்கள் எப்போதும் போராடும் குணத்தை வெளிப்படுத்துவோம்.வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் நாம் எப்படி அதனை கையாளுகிறோம் என்பதுதான் முக்கியம்.

20 மில்லியன் மக்கள் அப்போது காத்திருந்தனர். அந்த ஒரு ஏமாற்றமான தருணத்தையும் ,பெரும் சோகத்தையும் , அந்த சிரிப்புக்கு நான் அடக்கி வைத்தேன் என்று தெரிவித்துள்ளார் குமார் சங்ககாரா. அவர் தோல்வி அடைந்தும் சிரித்துகொண்டிருந்த அந்த புன்னகை உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தது.

மேலும் அவரது இந்த குணம் ஏற்கனவே அவருக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதுமட்டுமின்றி இந்திய ரசிகர்கள் வெற்றியின் களிப்பில் இருந்தாலும் அவரது குணத்தினை மதித்து அவரின் நல்ல உள்ளத்தினை மதித்து அவரை பெருமைப்படுத்தும் விதமாக அந்த புகைப்படத்தினை அதிகளவு பகிர்ந்தும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by