சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஒரு சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது – சங்கக்காரா ஓபன் டாக்

- Advertisement -

இங்கிலாந்து நாட்டில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் மூன்றாவது போட்டியில் விளையாடியது. இந்த போட்டியும் மழை காரணமாக டிரா ஆனது மட்டுமின்றி தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

anderson 1

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் முரளிதரன் 800 விக்கெட்டுகள் உடனும், இரண்டாவது இடத்தில் வார்னே 708 விக்கெட்டுகள் உடனும், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் உடன் உள்ளனர். இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பாகிஸ்தானின் அசார் அலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

- Advertisement -

ஆம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 156 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நேற்று தனது 600 ஆவது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். 2003ஆம் ஆண்டு தனது கேரியரை ஆரம்பித்த ஆண்டர்சன் சுமார் 17 ஆண்டுகளாக விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் அதிகமாக ஏற்படும். இருப்பினும் காயத்தினால் பல வலிகளை கடந்து இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.

anderson 2

இந்நிலையில் ஆண்டர்சனின் இந்த சாதனையை பாராட்டி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா : இப்போது மட்டுமல்ல எதிர்காலத்தில் வரவுள்ள ஃபாஸ்ட் பவுலர்கள் யாரும் ஆண்டர்சனின் இந்த சாதனையை முறியடிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அவர் ஒரு மிகக் கடினமான இலக்கை செட் செய்துள்ளார் அவரின் இந்த சாதனையை நிச்சயம் இனிமேல் யாராலும் எட்ட முடியாது என்று சங்கக்கார கூறியுள்ளார்.

anderson 2

ஏனெனில் தற்போது அதிகரித்துவரும் டி20 போட்டிகளின் காரணமாக டெஸ்ட் போட்டிகள் குறைவாகவே நடைபெற்று வருகின்றன. மேலும் அப்படியே வீரர்கள் விளையாடினாலும் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேல் விளையாடுவது என்பது இனிமேல் அரிது எனவே ஆண்டர்சனின் இந்த 600 டெஸ்ட் விக்கெட் என்பது இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முறியடிக்க முடியாத சாதனையாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார் அது குறிப்பிடத்தக்கது.

Advertisement