எனது கிரிக்கெட் வாழ்வில் நான் பார்த்த 2 சிறந்த பேட்ஸ்மேன்கள் – சங்கக்காரா ஓபன் டாக்

குமார் சங்கக்காரா இலங்கையை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 42 வயதாகிறது. இலங்கை அணிக்காக விளையாடிய மிகச்சிறந்த இடதுகை ஆட்டக்காரர். இலங்கை அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளிலும் 404 ஒருநாள் போட்டிகளிலும் 56 டி20 போட்டியிலும் விளையாடியிருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார் குமார சங்கக்காரா.

Sangakkara

அவரது காலத்தில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தவர் குமார சங்கக்காரா. இந்நிலையில் தனக்கு பிடித்த இரண்டு வீரர்கள் பற்றி பேசியுள்ளார். அந்த இரண்டு வீரர்கள் இந்திய வீரர் ஒருவரும், இலங்கை வீரர் ஒருவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளின் இரண்டு வீரர்களை காட்டி தனக்கு பிடித்த வீரர்கள் இவர்கள் தான் என்று கூறியுள்ளார் குமார் சங்ககாரா.

ட்விட்டரில் கிரிக்கெட் வரலாற்றில் தங்களுக்கு பிடித்த மிகச்சிறந்த இருந்த பேட்ஸ்மேன்கள் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிஷ்ஷர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா ஆகிய இருவரும்தான் தனது பேட்டிங் ஹீரோக்கள் என்று கூறியுள்ளார்.

lara

மேலும் கிரிக்கெட் விளையாட்டை ஒரு தொழிலாக மாற்ற உதவியது அவர்கள் தான் என்றும் கூறியுள்ளார். தற்போது குமார் சங்ககாரா கிரிக்கெட் தொடர்பான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி ஐ.சி.சி யின் தலைவராக ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

viv richards

அதுமட்டுமின்றி தான் சந்தித்த கடினமான பவுலர்களாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கானையும் தேர்வு செய்துள்ளார்.