எனது 15 வருஷ கிரிக்கெட்டில் நான் பார்த்து பயந்த 2 பவுலர்ஸ் இவங்க தான் – சங்கக்காரா ஓபன் டாக்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் எப்பொழுதும் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாராவுக்கு ஒரு இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல. அந்த அளவுக்கு தனது கேரியரில் அவர் மிகச் சிறந்த பல சாதனைகளை படைத்துள்ளார்.

Sangakkara

- Advertisement -

2000மாவது ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அறிமுகமான அவர் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக தொடர்ந்து 15 ஆண்டுகள் விளையாடி வந்தார். தனது 15 ஆண்டுகள் கால கிரிக்கெட்டில் 134 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 404 ஒருநாள் போட்டிகளிலும், 56 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் 15 ஆண்டுகள் விளையாடிய சர்வதேச கிரிக்கெட்டில் பல மிகச்சிறந்த பவுலர்களை சந்தித்து இருப்பதாகவும், அதில் இருவர் மட்டும் தான் எதிர் கொள்ள மிகவும் கடினமான பவுலர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து சங்கக்காரா தான் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Sanga 2

அவரது கேரியரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மெக்ராத், பிரெட் லீ, கும்ப்ளே, ஹர்பஜன் போலாக், ஸ்டெயின், ஸ்டார்க் என பல சிறந்த பவுலர்களை எதிர்த்து ஆடிய அவர் இரண்டு பவுலர்கள் என்னை மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் மற்றும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆகிய இருவரும்தான் தான் எதிர்கொண்ட திலேயே மிக கடினமான பந்துவீச்சாளர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Zaheer-Khan

இதுகுறித்து அவர் பேசுகையில் : வாசிம் அக்ரமை எதிர் கொள்வது மிகக் கொடுமை அதேபோல அதிக முறை நான் ஜாஹீர் கானை எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன். இருந்தாலும் அவர் எப்போதுமே நான் பேட்டிங் செய்ய கஷ்டப்பட்ட பவுலர் என்றும் சங்ககாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement