சும்மா எதனா குத்தம் சொல்லினே இருக்காதீங்க. அவர்கிட்ட திறமை இருக்கு நிச்சயம் சாதிப்பார் – சங்ககாரா நம்பிக்கை

Sangakkara

இலங்கை அணியின் முன்னாள் இடதுகை ஆட்டக்காரரும், மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவருமான சங்கக்காரா தற்போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பண்ட் குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அதில் பண்ட் குறித்து சங்கக்காரா கூறியதாவது : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்களில் சதமடித்து தனது டெஸ்ட் கேரியரை தொடங்கியவர் பண்ட்.
இருந்தாலும் தற்போது அவர் கஷ்டப்பட்டு வருகிறார்.

Sanga

பேட்டிங்கிலும் சரி, கீப்பிங்கிலும் சரி அவர் தற்போது கஷ்டப்பட்டு வருகிறார். முதலில் அவரை அவரின் குறைகளை புரியவைத்து அவர் சரி செய்ய வேண்டிய பகுதிகளை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மேலும் அவரை அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு சுதந்திரமாக விளையாட வைக்க வேண்டும்.

ஏனெனில் தனது மீது இருக்கும் அழுத்தத்தை அவர் உணர்ந்தால் அவரால் சிறப்பாக விளையாட முடியாது. எனவே அவருடன் கலந்து பேசி அவருடைய பேட்டிங்கில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அவரை அவரது போக்கில் சுதந்திரமாக விளையாட விட்டால் அவர் நிச்சயம் தனது பொறுப்பினை உணர்ந்து சிறப்பாக செயல்படுவார்.

Pant

மேலும் அவர் ஒரு இளம் வீரர் அவரிடம் ஏகப்பட்ட திறமைகள் உள்ளன. அதனை நிச்சயம் அவர் வெளிக்கொணர்வார். ஒரு விக்கெட் கீப்பராக அவர் ஸ்டம்பிற்கு பின்னால் கீப்பராக நிற்பதற்கு ஏகப்பட்ட தன்னம்பிக்கை வேண்டும் எனவே கீப்பிங் டெக்னிக்கில் மேலும் சில விடயங்களை அவர் கற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தினால் அவர் பெரிய ஆளாக வருவார் என்று சங்கக்காரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -