அடுத்த ஆண்டும் தோனி இப்படியே வந்தா அவ்வளவு தான். கொஞ்சம் யோசிங்க – தோனிக்கு அறிவுரை கூறிய சங்கக்காரா

Sanga
- Advertisement -

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பிறகு டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் மேலும் பேட்டிங் பயிற்சியும் டோனி எடுக்காமல் இருந்து வந்தார். அதன் பிறகு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னையில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போதும் கொரோனா பாதிப்பினால் அவர் பாதியிலேயே ராஞ்சி திரும்பினார்.

Dhoni-1

- Advertisement -

அதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவரால் நினைத்தபடி பல ஷாட்டுகளை விளையாட முடியவில்லை மேலும் அவர். நினைத்தபடி பந்தை அவரால் அடிக்கவும் முடியவில்லை. ஒரு கேப்டனாக 13 வருட ஐபிஎல் போட்டியில் தோனி தற்போது மோசமான பார்மில் உள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங்கால் அணிக்கு பங்களிப்பை அளிக்க முடியவில்லை. கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பினிஷராக கருதப்படும் தோனி இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிகரமாக பினிஷிங் செய்யவில்லை.

தோனியின் இந்த நிலைக்கு காரணம் யாதெனில் இந்த தொடருக்கு முன்னால் போதுமான அளவு அவர் பேட்டிங் பயிற்சி செய்யவில்லை என்பதும் போட்டி நடைபெறும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற அசாத்தியமான அசட்டுத்தனமான நம்பிக்கையும்தான். அதனால்தான் அவரால் அனைத்து பங்களிப்பை செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. 13 ஆண்டுகளில் அவர் அனைத்து வருடங்களிலும் அரைசதம் அடித்து விடுவார்.

ஆனால் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 200 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 47 ரன்கள் மட்டுமே அதிகபட்சமாக அவர் அடித்துள்ளார். இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அப்படியே அவரது பேட்டிங் பார்ம் மோசமாக இருக்கிறது இந்நிலையில் இது குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா கூறுகையில் : ஐபிஎல் தொடர் என்பது உலகின் பல்வேறு சர்வதேச சிறந்த வீரர்கள் இணைந்து விளையாடும் ஒரு போட்டி.

- Advertisement -

இதற்காக தோனி நன்றாக பேட்டிங் பயிற்சி எடுத்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் இம்முறை தோனியால் அது முடியவில்லை. ஆனால் இதே போன்று அடுத்த ஆண்டும் தோனி தொடரக்கூடாது என நம்புகிறேன். அடுத்த ஐபிஎல் சீசன்க்கு முன்னர் அவர் பேட்டிங் பயிற்சி பெரும் அளவில் முறையாக எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி உள்ளூர் போட்டிகளில் தோனி தொடர்ந்து விளையாடி அவரது பேட்டிங்கை மீட்டெடுக்க வேண்டும்.

Dhoni

அவரது பேட்டிங்கில் என்ன தவறு நடந்தது என்பதை கண்டறிந்து அவர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். மேலும் அடுத்த ஆண்டுக்கு முன்னர் சிறப்பான, முறையான பயிற்சியுடன் அவர் வந்து பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் சங்ககரா கூறியுள்ளார்.

Advertisement