பீல்டிங் செட்டப்பை பார்த்தே பவுலர் எங்க பந்து வீச போறார்னு கணிச்சி அடிக்குறாரு – இளம்வீரரை புகழ்ந்த சங்கக்காரா

Sanga
- Advertisement -

நேற்றைய முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டனர். இதில் முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் ஜோடி துணையோடு வெறும் 16.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்கள் அடித்திருந்தார். இதில் 11 பவுண்டரிகளும் 6 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் கோலி 47 பந்துகளில் 72 ரன்கள் அடித்திருந்தார்.

Padikkal

- Advertisement -

போட்டி முடிந்தவுடன் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா படிக்கலை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு பந்துவீச போகிறார்கள் என்பதை பீல்டிங் அமைப்பை பார்த்தே படிக்கல் கணித்து விட்டார். எல்லா பந்தையும் அவர் மிக நிதானமாக மேற்கொண்டார். மறுமுனையில் விராட் கோலி இருக்க அவரிடம் அவ்வப்போது ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டார்.

அவரது ஆட்டத்தில் ஒரு புத்திசாலித்தனமும் அதே நேரத்தில் சற்று நிதானமும் தெரிகிறது. பின்னாட்களில் அவர் நிச்சயமாக இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாட போகிறார் என்று கருதுகிறேன் என்று குமார் சங்ககாரா இறுதியாக கூறினார்.

மேலும் இவரைப் பற்றி இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஒரு சில வார்த்தைகளில் கூறியுள்ளார். படிக்கல் உள்ளூர் போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடியவர். ரஞ்சி ட்ராபி, விஜய் ஹசாரே டிராபி என பல உள்ளூர் ஆட்டங்களில் மிக அற்புதமாக மற்றும் அபாரமாக விளையாடிய வீரர் ஆவார்.

padikkal

அவர் இவ்வாறு ஆடுவது என்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. 50 ஓவர்கள் மற்றும் 20 ஓவர்கள் என இரண்டு பார்மட்டிலும் மிக அற்புதமாக விளையாடக் கூடியவர் படிக்கல். இவர் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்காக ஆடலாம். அதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. இவ்வாறு சுனில் கவாஸ்கர் படிக்கல்லை புகழ்ந்து கூறியுள்ளார்.

Advertisement