கோலி, ஸ்மித், வில்லியம்சன் போன்று இவரும் ஒரு வேறலெவல் பிளேயர். இளம்வீரை புகழ்ந்த – சங்கக்காரா

Sanga

தற்போதைய கால கிரிக்கெட்டில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இந்த தலைமுறையின் மிகச்சிறந்த வீரர்களாக கருதப்படுகின்றனர். அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி எல்லா இடங்களிலும் அவர்கள் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்தி ரன்களை குவித்து வருகின்றனர்.

Azam

இவரைப்போலவே பாகிஸ்தானில் மற்றொரு வீரர் இருக்கிறார் ஆம் பாகிஸ்தான் அணியின் இளம்வீரரான பாபர் அஸாம். இவர் விராட் கோலியை போலவே ஆடுகிறார் என பல முன்னாள் வீரர்கள் சமீப காலமாக வாழ்ந்து வருகின்றார் . தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி அணிக்காக ஆடி வரும் பாபர் பெஷாவர் அணிக்கு எதிராக 56 பந்துகளில் 77 ரன்களை குவித்து தன் அணியை வெற்றிபெற வைத்தார் .

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய எம்சிசி கிரிக்கெட் கிளப்பின் தலைவருமான சங்ககாரா பேசியதாவது : பாபர் அஸாமின் பேட்டிங்கை நான் பல காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேலும் கராச்சியில் அவருடனும் விளையாடியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் .

விராட் கோலி, கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்மித் போன்ற வீரர்களின் வரிசையில் அவரை வைக்கலாம் . எல்லாவிதமான போட்டிகளிலும் தன்னை மாற்றிக் கொண்டு எளிதாக ரன்களை சேர்க்கிறார். அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் அவர் என்னையும் மிஞ்சி விட்டார் என்று கூறியுள்ளார் சங்ககாரா.

- Advertisement -
- Advertisement -