ஜாஹீர் கானை கடந்து ஐ.பி.எல் வரலாற்றில் முக்கிய சாதனையை படைத்த சந்தீப் சர்மா – விவரம் இதோ

Sandeep-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியாக 56வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 36 ரன்களையும், இஷான் கிஷன் 33 ரன்களை குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நதீம் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை தக்க வைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் சஹா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 85 மற்றும் 58 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சபாஷ் நதீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

srh

இந்நிலையில் நேற்றைய போட்டியில் விளையாடியதன் மூலம் சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Sandeep

அதுமட்டுமின்றி 2013ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இவர் 90 ஆட்டங்களில் 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 53 விக்கெட்டுகள் பவர் பிளேயில் எடுத்தவை இதன்மூலம் ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement