கோலியின் விக்கெட்டை வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்த சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் – விவரம் இதோ

srh
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதராபாத் அணி பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

RCBvsSRH

- Advertisement -

அதனை அடுத்து ஆடிய ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும் பெங்களூர் அணி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இதே போட்டியில் விராட் கோலி சந்தீப் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

விராட்கோலியின் இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார் சந்தீப் சர்மா. பெங்களூரு அணிக்கு எதிராக 12 முறை விளையாடியுள்ள சந்தீப் சர்மா 7 முறை இந்த போட்டிகளில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். மேலும் அவருக்கு எதிராக 68 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருக்கிறார்.

Kohli-2

அதே நேரத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் சந்தீப் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். அந்த அணிக்கு எதிராக மட்டும் மொத்தம் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

sandeep

மேலும் ஒரு பேட்ஸ்மேனை ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிக முறை விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஜாகிர் கான் மகேந்திர சிங் தோனி ஏழுமுறை ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக சந்தித்து சர்மா விராட் கோலி ஏழுமுறை ஆட்டமிழக்கச் செய்து இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

Advertisement