என்னங்க பும்ரா ? அவரைவிட திறமையான பவுலர் இருக்காரு ஆனால் இன்னும் இந்திய அணியில் இடமில்லை – விவரம் இதோ

Bumrah-1
- Advertisement -

இந்தியாவில் சமீபகாலமாக வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் உருவாகி வருகிறார்கள். 2013ஆம் ஆண்டு ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது வரை அவர் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் மூன்று வகையான அணிக்கும் பந்து வீச்சு தலைவராகவும் இருக்கிறார். அவரை விட மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லை என்னும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்.

Bumrah

- Advertisement -

அவருடன் போட்டி போடும் அளவிற்கு இந்தியாவில் எந்த பந்துவீச்சாளர்கள் இல்லை எனும் கருத்தாக்கங்கள் இருந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய சந்தீப் சர்மா ஜஸ்பிரித் பும்ராவை, விட மிகச் சிறப்பான புள்ளிவிவரத்தை வைத்திருக்கிறார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா.

இதற்கு முன்னர் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். தற்போது வரை இந்திய அணியில் இவரிடம் பிடிக்கவில்லை எனினும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சம காலத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான இருவருமே 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய நிலையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் தான் இது அதன் அடிப்படையிலேயே இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.

Sandeep-1

இதில் பும்ரா 105 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அதே நேரத்தில் சந்தீப் சர்மா 108 விக்கட்டுகள் அடித்து சாய்த்திருக்கிறார். இது அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் திருப்பி இருக்கிறது. மேலும், பந்துவீச்சு சராசரியை பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா 24.22 வைத்திருக்கிறார். அதே நேரத்தில் சந்தீப் சர்மா 24 மட்டுமே வைத்திருக்கிறார்.

- Advertisement -

ஸ்ட்ரைக் ரேட்டை எடுத்துக்கொண்டால் ஜஸ்பிரித் பும்ரா 19.4, சந்தீப் சர்மா 18.6 அனைத்திலும் ஜஸ்பிரித் பும்ராவின் புள்ளிவிவரத்தை விட சிறப்பாக வைத்திருக்கிறார் சந்தீப் சர்மா. அப்படி இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி இந்த முறை 23 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

ஆனால் சந்தீப் சர்மா நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தி இருக்கிறார். இருப்பினும் வெளியில் வராத ஒரு பெரிய வீரர் என்ற பெயரோடு இன்னும் இந்திய அணியில் தனது இடத்திற்காக சந்தீப் சர்மா போராடி வருகிறார்.

Advertisement