சின்ன பயனுக்காக இவரை அணியில் சேர்க்காமல் அசிங்கப்படுத்துவீங்களா ? – பொங்கி எழுந்த தேர்வுக்குழு தலைவர்

Sandeep
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி ஆகியவற்றை இழந்தது. இதனால் தற்போது இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த தோல்விக்கு காரணம் இந்தியாவில் படுமோசமான பேட்டிங்கே என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை யாருமே இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. பேட்டிங்கில் ஏற்பட்ட மோசமான செயல்பாடு காரணமாக நான்கு இன்னிங்ஸ்களில் ஒருமுறைகூட இந்திய அணியால் 200 ரன்கள் அடிக்க முடியவில்லை.

முதல் போட்டியில் அகர்வால் மற்றும் ரகானே சிறப்பாக ஆடினர். ஆனால் இரண்டாவது போட்டியில் அவர்களும் சரியாக விளையாடவில்லை. கோலி, புஜாரா, ப்ரித்வி ஷா மற்றும் விஹாரி என அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய காரணமாக முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்று வெளியேறியது.

இந்திய அணி அடைந்த இந்த ஒயிட்வாஷ் தோல்விகளுக்கு இந்திய அணியின் தவறான தேர்வு தான் காரணம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான சந்தீப் பாட்டீல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இந்திய அணியில் பண்டை இறக்கியது தவறு என்றும் மேலும் வெளிநாட்டு தொடர்களில் சஹா புறக்கணிக்கப்படுவதையும் கண்டித்துள்ளார். ஸ்பின் பவுலிங்கில் விக்கெட் கீப்பிங் செய்ய சிறந்த விக்கெட் கீப்பர் தேவை அதனால் பண்டை விட பல மடங்கு சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்யும் சஹாவை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

rahane

என்னை பொறுத்தவரை இந்திய அணி முதன்மை விக்கெட் கீப்பர் நீண்ட அனுபவம் கொண்ட சஹா தான். இக்கட்டான சூழ்நிலையில் அணியை காப்பாற்றும் திறமை அவரிடம் உள்ளது. அவரின் பேட்டிங்கை நீங்கள் ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவரது நம்பிக்கை மற்றும் திறனை என்றும் நான் ஆதரிக்கிறேன் என்று அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement