உங்களுக்கு பதிலாக செக்யூரிட்டியே விளையாட வைக்கலாம். இந்திய அணியின் சீனியர் வீரரை சீண்டிய – சந்தீப் பாட்டீல்

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி பெரிய அதிர்ச்சியில் உள்ளது.

Ind-lose

- Advertisement -

மேலும் பலதரப்பட்ட தரப்பிலிருந்தும் இந்திய அணிக்கு தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த தொடரின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக இந்திய அணி வீரர்களின் பொறுப்பற்ற பேட்டிங்கே காரணம் என்று அனைவரும் கூறிவருகின்றனர். கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் நான்கு நாட்களில் வெறும் 36 ரன்களை மட்டுமே குவித்தார்.

புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் தலா ஒரு அரைசதம் அடித்து சற்று ஆறுதலை தந்தனர். இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே நிறைய ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் வெளிநாட்டு மைதானங்களில் அவர் எப்போதுமே சிறப்பாக விளையாடும் பழக்கம் உடையவர்.

rahane

அவர் முதல் போட்டியில் நிதானமாக விளையாடி 46 ரன்களை சேர்த்து இருந்தார். ஆனால் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் அவரது ஆட்டம் மோசமாகியது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 20, 30 என்று இருந்தது. இதனால் அவருடைய இந்த பொறுமையான ஆட்டம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. மேலும் நான்கு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 96 ரன்களை மட்டுமே ரகானே குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது : மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் ஆடிய போது மிக நிதானமாக ஆடியது குறிப்பிட்டு அந்த பொறுமையான ஆட்டத்திற்கு காரணம் தோல்வி பயம்தான் என வெளிப்படையாக தெரிகிறது. மேலும் ரஹானேவின் வெளிநாட்டு ரன் குவிப்பு அருமையாக இருந்து வருகிறது.

Rahane-1

ஆனால் அது எல்லாமே இப்பொழுது வரலாறு தான். அவர் வெறும் டெஸ்ட் வீரர் என்ற முத்திரை குத்தப்பட்டு உள்ளார் என்று சந்திப் பாட்டீல் கூறினார். மேலும் டெஸ்ட் வீரராக ஒரு விஷயத்தை நிரூபிக்க போராடுகிறார் என்றும் அவர் கிண்டலாக பேசியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரம் நிற்க வேண்டுமென்றால் அதற்கு பாதுகாவலர் போதும் யார் ரன் எடுப்பார்கள் என சரமாரியாக தாக்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement