இலங்கை அணிக்கு உதவிய ராஜஸ்தான் ராயல்ஸ்.. அவர்தான் ட்ரெயின் பண்ணாரு – சனத் ஜெயசூரியா தகவல்

Sanath
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது. புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவும், புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீரும் பொறுப்பேற்றுள்ள வேளையில் இந்திய அணியின் செயல்பாடு இந்த தொடரில் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலுமே அதிகரித்துள்ளது.

அதோடு டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்த வேளையில் இலங்கை அணியானது லீக் சுற்று போட்டிகளிலேயே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அந்த தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

அதன்காரணமாக இலங்கை அணியின் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த வேளையில் தற்போது இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் இலங்கை பிரீமியர் லீக் எல்.பி.எல் தொடரில் விளையாடி முடித்துவிட்டு இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் விளையாட இருக்கின்றனர்.

அதன் காரணமாக அவர்களது செயல்பாடும் இந்த தொடரில் பார்க்கப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் இலங்கை அணியின் வீரர்களை தயார் செய்வதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளரான சனத் ஜெயசூர்யா கூறுகையில் :

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாட விரும்புகிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் எல்பிஎல் தொடரில் விளையாடினர். அதனால் இந்த இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் எந்த பாதிப்பும் கிடையாது. நாங்கள் பயிற்சியை துவங்கிய போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜூபின் எங்களுக்கு உதவ முன்வந்தார்.

இதையும் படிங்க : மொத்த பாகிஸ்தானும் பயப்படும்.. இந்தியாவை ஜெயிக்க வாசிம் அக்ரம் அவரை அவுட்டாக்கனும்ன்னு சொல்வாரு.. பசித் அலி

இலங்கை வீரர்கள் அவருடன் ஆறு நாட்கள் பணியாற்றி பயிற்சி அளித்தார். அவரிடம் இருந்து பேட்டிங் டெக்னிக்களை எங்களது வீரர்கள் கற்று இருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்திய அணியில் தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாத வேளையில் அதனை சாதகமாக்கி நாங்கள் இந்த தொடரை கைப்பற்றுவோம் என சனத் ஜெயசூரியா கூறியது குறிப்பிடப்பட்டது.

Advertisement