மகனுக்கு பயிற்சி கொடுக்கும் சனத் ஜெயசூரிய.! வைரலாகும் வீடியோ.!

sanath
- Advertisement -

கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக இருந்த பல்வேறு வீரர்களின் வாரிசுகள் கிரிக்கெட்டில் கால் பதித்து வருகின்றனர். சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் மகன் அர்ஜுனை தொடர்ந்து ராகுல் டிராவிட் மகன் வரை கிரிக்கெட் விளையாட்டில் அசத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெய்சூர்யாவின் மகனும் இனைந்துள்ளர்.

- Advertisement -

இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெய்சூர்யா 1989- 2011 ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்த வந்த இவர் அந்த அணியின் சிறந்த ஆல்ரவுண்டராகவும் இருந்து வந்தார். தற்போது இவரது மகன் ரனுக் ஜெய்சூர்யாவும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஜெய்சூர்யாவின் மகன் ரனுக் ஜெய்சூர்யா வலைபயிற்ச்சி செய்து கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் தனது மகன் ரனுக்கிற்கு ,ஜெயசூர்யா பந்து வீச அதை தனது அப்பாவை போன்றே பந்துகளை மிகவும் லாவகமாக பேட் மூலம் அடிக்கிறார் ரனுக் .தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.

Advertisement