நான் கேப்டன் ஆனதும் தோனி மட்டுமல்ல இவங்க 2 பேரும் எனக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்புனாங்க – சாம்சன் மகிழ்ச்சி

Samson
- Advertisement -

சென்ற ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு மிகப்பெரிய மோசமான தொடராக அமைந்துவிட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடைசி இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடரை முடித்துக் கொண்டது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை இந்த ஆண்டு அதைத்தான் ராயல்ஸ் அணியில் தனது அணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றி விட்டது.

Smith

இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சம்சன் புதிதாக தலைமை தாங்க உள்ளார். இந்நிலையில் தான் கேப்டன் ஆனது குறித்து சஞ்சு சாம்சன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
19 வயதில் 2013 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சஞ்சு சாம்சன் ஆவார். சென்ற ஆண்டு சரியாக விளையாடாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இந்த ஆண்டு மிகச் சிறப்பான வகையில் கட்டமைக்க ராஜஸ்தான் கிரிக்கெட் அணி திட்டம் தீட்டியது.

- Advertisement -

அதன் காரணமாக ஏலத்தில் சிறந்த வீரர்களை வாங்கியதோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியை தலைமை தாங்கும் பொறுப்பை இளம் வீரர் சஞ்சு சாம்சன் இடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய சாம்சன் :

Smith

முதலில் ராஜஸ்தான் அணியின் ஓனர் மனோஜ் என்னிடம் தலைமை தாங்குமாறு விருப்பத்தை தெரிவித்தார். நானும் மகிழ்ச்சியுடன் தலைமைதாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அந்த நிமிடம் வரை நான் ராஜஸ்தான் அணிக்காக கேப்டன் ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்று சாம்சன் கூறியுள்ளார்.

Samson

மேலும் நான் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு தோனி, ரோஹித், கோலி ஆகிய மூவரும் எனக்கு வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்தனர். அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தியன் அணிக்காக மட்டும் இன்றி ஐபிஎல் வரலாற்றிலும் மிக முக்கிய மூன்று கேப்டனாக திகழும் இந்த மூவரும் எனக்கு வாழ்த்துச் சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்தது மிகவும் மகிழ்ச்சியை தந்தது எனவும் சஞ்சு சாம்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement