இப்படியே போனா வேலைக்காகாது. எங்களிடம் இருக்கும் குறையை நீக்கியே ஆக வேண்டும் – சாம்சன் வருத்தம்

Samson
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது.

dube

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் மிடில் ஆர்டரில் வந்த ஷிவம் துபே, ரியான் பராக், ராகுல் தேவாத்தியா ஆகிய சிறப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி ஒரு டீசன்டான இலக்கை பெங்களூரு அணிக்கு நிர்ணயம் செய்து. அதனை தொடர்ந்து 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரரான தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராத் கோலி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் பெங்களூரு அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது 4 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

padikkal

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : பெங்களூரு அணியின் பேட்டிங் இன்று சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் இந்த போட்டியில் சரியாக பேட்டிங் செய்ய தவறி விட்டோம். துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டாலும் பிறகு ஓரளவு டீசன்ட்டான ரன் குவிப்பை எங்கள் அணியின் வீரர்கள் வழங்கியிருந்தனர். ஆனாலும் இந்த ஸ்கோர் வெற்றிக்கு பத்தாது. நாங்கள் இன்னும் நிறைய முயற்சி எடுக்க வேண்டும்.

tewatia

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் அனைவருமே இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். எந்த இடத்தில் தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதனை சரிசெய்து திரும்பினால் தான் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். நாங்கள் இனி வரும் போட்டிகளில் நிச்சயம் கம்பேக் கொடுப்போம். இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி எங்களது தவறினை சரிசெய்து அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வைக்க உதவும் என சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement