நீ உள்ள போய் உன் திறமையை காட்டுனு எனக்கு சப்போர்ட் கொடுத்த கேப்டன் இவர்தான் – மனம் திறந்த சஞ்சு சாம்சன்

Samson
- Advertisement -

கேரளாவில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய வெகு சில கிரிக்கெட் வீரர்களில், சஞ்சு சாம்சன் ஒருவர் தனது 17ம் வயதிலேயே ஐபிஎல் அணிக்காக ஒப்பந்தம் ஆனவர். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக கிட்டத்தட்ட கடந்த 8 வருடமாக இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார்.

Samson

- Advertisement -

இந்திய அணியில் தொடர்ந்து இடம் இல்லை என்றாலும் அவ்வப்போது ஒரு சில தொடர்களில் ஒரு சில போட்டிகளில் அட அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. முதன்முதலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை 17 வயதில் எடுத்து வைத்திருந்தது. அங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக இளம் வீரரான இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் அப்படியே தூக்கி வைத்து வளர்த்தார். ராகுல் டிராவிட்டின் தலைமையில் தான் முதன்முதலாக ஐபிஎல் போட்டியிலு ஆடினார் சஞ்சு சாம்சன். தற்போது இது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

நான் கொல்கத்தா அணியில் இருந்த போது எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் தான் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கினார். அவரது நம்பிக்கையும் நான் கெடுத்துவிடவில்லை.

- Advertisement -

எனது முதல் போட்டியின்போது அவர் என்னிடம் வந்து உள்ளே போய் விளையாடி உன்னுடைய திறமையை நிரூபித்து காட்டு என்று ஊக்கமளித்தார். மேலும், தற்போதும் கூட எந்த பிரச்சினையாக இருந்தாலும் எனது வீட்டின் கதவுகள் உனக்காக எப்போதும் திறந்தே இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சினையையும் நீ என்னிடம் கலந்து ஆலோசிக்கலாம் என்று வாக்குறுதி கொடுத்தார்.

samson

இதுதான் என்னை தற்போது வரை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் சஞ்சு சம்சன். இதுவரை 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 2209 ரன்களை குவித்துள்ளார் 10 அரை சதங்களையும் 2 சதங்களையும் விளாசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement