ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியின் விக்கெட் கீப்பர் யார்? சஞ்சு சாம்சனா? ஜிதேஷ் சர்மாவா?

Samson-and-Jitesh
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் எதிர்வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 17-ஆம் தேதி வரை இந்த டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் அணிக்குள் இணைந்ததால் சில இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பை இழந்தனர்.

அதேவேளையில் வாய்ப்புக்காக காத்திருக்கும் சில வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து அணி நிர்வாகம் அவர்களுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது. அந்த வகையில் தொடர்ச்சியாகவே இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள் பெறாமல் இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோன்று அண்மையில் இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடி வரும் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவரில் யாருக்கு ஆப்கானிஸ்தான் தொடரில் வாய்ப்பு கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமாகி இருந்தாலும் தொடர்வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இதுவரை 21 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் 19 ரன்கள் சராசரியுடனும் 133 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒரே ஒரு அரை சதத்தை மட்டுமே பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணிக்காக ஐந்து டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஜிதேஷ் சர்மா இதுவரை 69 ரன்கள் மட்டுமே குவித்திருந்தாலும் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடுகிறார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போதும் வெளிப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் 19 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க : அந்த விஷயத்துல இந்திய வீரர்கள் பெஸ்ட்.. விராட் கோலி அதை செய்ய மாட்டாரு.. தெ.ஆ லெஜெண்ட் பாராட்டு

இருப்பினும் சஞ்சு சாம்சன் கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உடையவர் என்பதனாலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்ததால் அவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் அனுபவத்தின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் தான் இந்த முதலாவது டி20 போட்டிக்கான விக்கெட் கீப்பர் வாய்ப்பை பெறுவார் என்று தெரிகிறது.

Advertisement