இதெல்லாம் கண் துடைப்பு தான்.. சஞ்சு சாம்சனின் கரியரில் விளையாடும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தாலும் அந்த தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த தொடரில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இறுதிவரை விளையாடியதால் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் போனது.

இருப்பினும் இந்திய அணி பெற்ற வெற்றியால் சஞ்சு சாம்சன் மகிழ்ச்சியில் இருக்கிறார். இவ்வேளையில் தற்போது டி20 உலக கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டியில் இடம் பெறாத சஞ்சு சாம்சன் தற்போது மீதமுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணியுடன் இணைந்துள்ளார். ஏற்கனவே டி20 உலக கோப்பையில் வாய்ப்பு வழங்கப்படாததால் இந்த தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் அவர் வாய்ப்பினை பெறுவார் என்று தெரிகிறது.

அதே சமயம் இந்த வாய்ப்பு ஒரு கண்துடைப்பு தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் முக்கியத்துவம் மற்ற ஒரு எளிய அணிக்கு எதிராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வேளையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் இலங்கை அணி எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

- Advertisement -

ஏனெனில் 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி தயாராக உள்ளதால் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் எனவே சஞ்சு சாம்சனுக்கு இது ஒரு கண் துடைப்பு தொடராக இருக்கலாம் என்றும் மேலும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவரை அணியிலிருந்து கழட்டிவிடவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : பேசி சம்மதிக்க வைங்க.. ஆஸியை வீழ்த்தி அந்த உ.கோ ஜெய்க்க பாண்டியா தேவை.. கவாஸ்கர் கோரிக்கை

இருப்பினும் ஒருவேளை ரிஷப் பண்டிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அவரால் ஆட முடியாத சூழல் ஏற்பட்டாலோ சஞ்சு சாம்சன் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இருந்தாலும் அவர் இஷான் கிஷன் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோருடன் போட்டியிட வேண்டிய சூழலும் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement