
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் தற்போது கர்நாடக மாநில அணிக்காக விளையாடும் முனைப்புடன் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் மகாராஜா டி20 லீக் தொடரில் விளையாடி வரும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தனது தந்தையை போல அவரும் மிகச் சிறப்பான வீரராக வருவார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். மிரட்டலான சிக்ஸர்களை அடித்து அற்புதப்படுத்தி வரும் அவர் இதே பார்மில் விளையாடினால் ஐபிஎல் தொடரிலும் வெகுவிரைவாக இடம் பிடிப்பார் என்றும் பேசப்பட்டு வந்தது.
ஆனால் பி சி சி யின் விதிமுறைப்படி தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் தற்போது 18 வயதாகும் சமித் டிராவிட் கர்நாடக மாநில அண்டர் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடி இருந்தாலும் அவர் பிசிசிஐ நடத்தும் தொடர்களில் இதுவரை விளையாடியது கிடையாது.
குறிப்பாக கர்நாடக மாநில அணிக்காக இடம் பிடித்து குறைந்தது 2 லிஸ்ட் ஏ போட்டிகள் அல்லது இரண்டு முதல்தர போட்டிகளிலாவது விளையாடி இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கையில் இதுவரை சமித் டிராவிட் கர்நாடக மாநில அணிக்காக பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் விளையாடியது கிடையாது.
எனவே அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது. ஒருவேளை அடுத்த ஆண்டு அவர் கர்நாடக மாநில அணிக்காக முதன்மை அணியில் இடம் பிடித்து ரஞ்சி டிராபி அல்லது விஜய் ஹசாரே தொடர் ஏதாவது ஒன்றில் விளையாடினால் அதன் பின்னர் அதற்கு அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது பெயரை பதிவு செய்யலாம்.
இதையும் படிங்க : பேட்ஸ்மேன்களின் நைட்மேர்.. 6 வருஷமா இதை செய்யும் பும்ரா மெக்ராத், ஆண்டர்சன் மாதிரி.. பாண்டிங் பாராட்டு
அதனை தவிர்த்து அவரால் தற்போதைக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது. இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிடின் மகன் நிச்சயம் வெகு விரைவில் கர்நாடக மாநில அணிக்காக விளையாடி ஐ.பி.எல் தொடரில் இடம் பிடிப்பார் என்பது பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.