பும்ரா தலைமையிலான இந்திய அணியை அடிக்க திட்டம் வெச்சுருக்கேன்.. 19 வயது ஆஸி வீரர் சவால்

Sam Konstas
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. 3வது போட்டி டிராவில் முடிந்த நிலையில் 4வது போட்டி மெல்போர்ன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ளது.

அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 19 வயதாகும் இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாக களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் இத்தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான நாதன் மெக்ஸ்வீனி அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் அவருக்கு பதிலாக 4வது போட்டியில் தேர்வாகியுள்ள இவர் அறிமுகமாக விளையாடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

19 வயது வீரர்:

குறிப்பாக இந்தத் தொடருக்கு முன்பாக இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி டெஸ்ட் போட்டியில் கோன்ஸ்டஸ் அதிரடியான சதத்தை அடித்து அசத்தினார். அதனாலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சொல்லலாம். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய பவுலர்களை வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக எதிர்கொண்டு அழுத்தத்திற்குள் தள்ளுவேன் என்று கோன்ஸ்டஸ் கூறியுள்ளார்.

அதற்கு சில திட்டங்களை வைத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இந்திய அணிக்கு எதிரான சவாலை கொடுக்கப் போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய பவுலர்களுக்கு எதிராக நான் சில திட்டங்களை வைத்துள்ளேன். நான் நன்றாக நகர்வதாக உணர்கிறேன். எனவே அந்த வாய்ப்பை நான் பெறுவேன் என்று நம்புகிறேன்”

- Advertisement -

இந்தியாவுக்கு சவால்:

“நான் வரும் பந்தை பார்த்து ரியாக்சன் கொடுக்கப் போகிறேன். அதற்கு தகுந்தார் போல் கொஞ்சம் வேகமாக ரன்கள் குவிக்கும் எண்ணத்தை காண்பித்து அழுத்தத்தை மீண்டும் இந்திய பவுலர்கள் மீது போடுவேன். ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாவது மிகப்பெரிய கௌரவம். அது கனவு நிஜமான தருணம். அந்த வாய்ப்பு மெல்போர்ன் மைதானத்தில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவை எதிர்கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன்”

இதையும் படிங்க: சச்சின், பாண்டிங் மாதிரி கோலிக்கு ஈபிடிஎஸ் பிரச்சனை.. ரன்ஸ் அடிக்க இதான் வழி.. கிரேக் சேப்பல் அட்வைஸ்

“அவர்களுக்கு நான் சவால் செய்ய விரும்புகிறேன். மெக்ஸ்வீனி 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல வீரர். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக அவர் வாழ்த்து தெரிவித்தார். இது பற்றி எனது பெற்றோர்களிடம் தெரிவித்தேன் அதைக் கேட்டு என்னுடைய அம்மா கண்ணீர் விட்டார். அதனால் அழாதீர்கள் என்று சொன்னேன். அப்பா மிகவும் பெருமைப்பட்டார். மேடு பள்ளங்கள் நிறைந்த இந்தப் பயணத்தில் அவர்களுடைய தியாகங்களுக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement