ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முடிந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கும் தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. அந்த தொடரின் கடைசி போட்டியில் 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் கடைசி போட்டியில் இந்திய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ராவிடம் மோதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தப் போட்டியின் முதல் நாளில் மாலை வேளையில் பேட்டிங் செய்த துவக்க வீரர் உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே நேரத்தை தாமதம் செய்தார். அப்போது ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்ற வகையில் பும்ரா அவரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதற்கு தேவையின்றி எதிர்ப்புறம் இருந்த கோன்ஸ்டஸ் அவரிடம் சில வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தார்.
தேவையற்ற மோதல்:
அவருக்கு பும்ராவும் பதிலடி கொடுக்க சென்ற போது நடுவர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார். அடுத்த சில பந்துகளில் கவாஜாவை அவுட்டாக்கிய பும்ரா அப்படியே திரும்பி அவரை முறைத்து வெறித்தனமாக பதிலடி கொடுத்தார்கள். உடனடியாக தங்களுடைய கேப்டனை சீண்டிய கோன்ஸ்டஸ்க்கு மற்ற இந்திய வீரர்களும் வெறித்தனமான பதிலடியை கொடுத்தார்கள்.
அந்த வகையில் கவாஜா விக்கெட் விழுவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்ததாக மார்க் வாக் உள்ளிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் விமர்சித்தார்கள். அந்த தருணம் அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு ஒரு சிறிய திருப்பு முனையையும் கொடுத்தது. ஆனால் அந்த இடத்தில் இந்திய வீரர்கள் தங்களுடைய வீரரை மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் விமர்சித்தார்.
கோன்ஸ்டஸ் வருத்தம்:
எனவே இந்திய அணிக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் கவாஜா விக்கெட்டை இழக்க ஜஸ்ப்ரித் பும்ராவிடம் தேவையின்றி மோதிய தம்முடைய தவறு தான் கரணம் என்று சாம் கோன்ஸ்டஸ் கூறியுள்ளார். அந்த சமயத்தில் தாங்கள் வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்க முயற்சித்ததாகவும் அவர் ஒப்பு கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ரா மாதிரி உழைச்சு வாங்க.. சுப்மன் கில் அதுக்கு கூட தகுதியில்லாதவர்.. சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்
“அங்கே நான் மிகவும் குழப்பமடையவில்லை. துரதிஷ்டவசமாக அதன் பின் கவாஜா அவுட்டானார். அது என் தவறு. ஆனால் கிரிக்கெட்டில் அவ்வாறு நடப்பது சகஜம். அந்த விக்கெட்டை பெற்றதற்காக பும்ராவுக்கு பாராட்டுக்கள். அதே சமயம் அவர் அவர்களுடைய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறினார்.



