- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான கடைசி 2 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 19 வயது வீரர் – அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

யார் இந்த சாம் 19 வயது அறிமுக வீரர் :

இந்த எஞ்சியுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கடைசி இரண்டு போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக விளையாடி வந்த நாதன் மெக்ஸ்வீனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தனது அறிமுக டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஆஸ்திரேலியா விடுவித்துள்ளது.

- Advertisement -

அவருக்கு பதிலாக 19 வயதான மற்றொரு துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸ்க்கு அறிமுக அழைப்பை ஆஸ்திரேலிய அணி விடுத்துள்ளது. இதன் மூலம் நிச்சயம் டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற இருக்கும் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியின் போது அவர் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இப்படி 19 வயதான ஒரு வீரரை அணிக்குள் இணைத்து அவருக்கு அறிமுக வாய்ப்பை வழங்க என்ன காரணம்? என்பது குறித்தும் நாதன் கோன்ஸ்டாஸ் யார்? என்பது குறித்த தகவலையும் இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் 19 வயதுக்குட்பட்டோர் ஆஸ்திரேலியா அணியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த ஒரு துவக்க வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த சம்மர் சீசனில் மூன்று சதங்களையும் அடித்து அசத்தியுள்ளார் சாம் கோன்ஸ்டாஸ்.

- Advertisement -

தொடர்ந்து உள்நாட்டு தொடரில் அசத்தி வந்த அவர் ஆஸ்திரேலியா தேர்வுக்குழுவினரை இம்ப்ரஸ் செய்து வந்தார். அதுமட்டும் இன்றி இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு வந்து மேற்கொண்ட பயிற்சியின் போது ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியிருந்தது. அந்த போட்டியிலும் பிரைம் மினிஸ்டர் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய அவர் இந்திய அணிக்கு எதிராக அசத்தலான சதம் ஒன்றினை அடித்திருந்தார்.

இதையும் படிங்க : அறிமுக தொடரிலேயே கழட்டி விடப்பட்ட ஆஸி வீரர்.. 3 போட்டியோடு கரியரை காலி செய்த இந்தியா – விவரம் இதோ

இப்படி அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாகவே அவருக்கு இந்த அறிமுக வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பேஷ் தொடரிலும் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே அந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -