- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் பயமின்றி அடிக்க சொல்லிட்டாரு.. பும்ராவை மீண்டும் நொறுக்க வருவேன்.. சவால் விட்ட 19 வயது ஆஸி வீரர்

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 311-6 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 57, மார்னஸ் லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். களத்தில் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சவாலை கொடுத்து வருகிறார்கள். மறுபுறம் இந்தியாவுக்கு மீண்டும் அதிகபட்சமாக இதுவரை ஜஸ்ப்ரித் பும்ரா 3* விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்காக போராடி வருகிறார்.

- Advertisement -

பும்ராவுக்கு சவால்:

முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 19 வயதாகும் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் பும்ராவை அவர் அதிரடியாக எதிர்கொண்டார். அந்த வாய்ப்பில் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த வீரராகவும் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (18) அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் ஆஸ்திரேலியாவுக்காக இரண்டாவது இளம் வயதில் அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். இந்நிலையில் இதே போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் பும்ராவை அடித்து நொறுக்குவேன் என்று கோன்ஸ்டஸ் சவால் விடுத்துள்ளார். குறிப்பாக அதிரடியாக விளையாடி வைத்து பும்ராவின் திட்டங்களை தகர்ப்பதே தம்முடைய திட்டம் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மீண்டும் நொறுக்குவேன்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது கனவு நிஜமான தருணம். ஏனெனில் ரசிகர்களால் நிறைந்திருக்கும் மைதானத்தை பாருங்கள். பட் கமின்ஸ் உட்பட அனைவரும் என்னை அணிக்குள் வரவேற்றார்கள். பயமின்றி விளையாடுமாறு கேப்டன் கமின்ஸ் என்னிடம் சொன்னார். பும்ராவுக்கு எதிராக ரேம்ப் ஷாட் அடிப்பது பற்றி நேற்று திட்டமிடவில்லை. நல்ல ஷாட்டுகளை அடிப்பேன்”

இதையும் படிங்க: 311 ரன்ஸ்.. ஆஸியை அடக்க போராடும் இந்தியா.. ஹெட்டை அவுட்டாக்கி பும்ரா சாதனை.. கோலி ஸ்பெஷல் சாதனை

“அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். இருப்பினும் அவர் மீது அழுத்தத்தை போட முயற்சித்தேன். அவருடைய திட்டங்களை மாற்ற வைப்பதே முக்கியமான விஷயம். இந்த வகையில் அவரைத் தொடர்ந்து நான் டார்கெட் செய்து கொண்டே இருப்பேன். அவரும் கம்பேக் கொடுக்கலாம். அப்போது என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.

- Advertisement -